Header Ads



'முஸ்லிம் நேசன்' பத்திரிகை ஆற்றிய பங்களிப்பை இன்றைய முஸ்லிம் ஊடகங்கள் ஆற்றுவதில்லை

கண்டி ஜின்னா கேட்போர் கூடத்தில் கலாநிதி அனஸ் அவர்களின் தலைமையில் மலையகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது. கண்டி வரலாற்றில் மிக அதிகமான முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்ட சந்திப்பாக இது கருதப்படுகின்றது. கண்டியை மையமாகக் கொண்டு ஊடக அமைப்பொன்றைத் தோற்றுவிப்பது தொடர்பாக நடந்த இந்தக் கலந்துறையாடலில் மலையகத்தில் பல பிரதேசங்களைச் சேர்ந்த பெரும் தொகையான ஊடகவியலாளர்கள் இதற்கு  வருகை தந்திருந்தனர்.

இங்கு உரை நிகழ்த்திய கலாநிதி அனாஸ்,

இந்த நாட்டு முஸ்லிம் ஊடகத்துறை வரலாற்றில் 1880 களில் அறிஞர் சித்தி லெப்பை அவர்களினால் ஆரம்ப்பிக்கப்பட்ட முஸ்லிம் நேசன் என்ற பத்திரிகை முஸ்லிம் சமூகத்தை விளிப்படையச் செய்ய ஆற்றிய பங்களிப்பு ஒரு வரலாற்றுப் பதிவாகும். இந்த முஸ்லிம் நேசன் ஆற்றிய மகத்தான பங்களிப்பை இந்த நவீன காலத்தில்  நடத்தப்படுகின்ற முஸ்லிம் ஊடகங்களால் கூட  ஆற்றப்படுவதில்லை என்று சொல்ல வேண்டி இருக்கின்றது. எனவே அந்த இடைவெளி இன்றும் சமூகத்திற்கு இருந்து வருகின்றது என்று இந்த அமர்விற்குத் தலைமை தாங்கி உரை நிகழ்த்திய பேராதணைப் பல்கலைக்கழக சிரேஷட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் அங்கு குறிப்பட்டார்.

முன்னாள் மாகாணக் கல்விப் பணிப்பாளரும் மூத்த எழுத்தாளருமான எஸ்.எம்.ஏ.ஹசன் இவ்வாறான அமைப்பொன்றைத் தோற்றுவிக்க நாம் நெடுங்காலமாகப் பலமுறை முயற்சித்த போதும் அது இன்று வரை எம்மால் நிறைவு செய்யப்படவில்லை. எனவே இன்று இவ்வமைப்பைத் தோற்றுவிக்க எடுக்கப்பட்டுள்ள தீர்க்கமான முடிவு மிகுந்த மன நிறைவைக் கொடுக்கின்றது என்று இங்கு குறிப்பிட்டார்.

இந்த அமைப்புத் தொடர்பான ஏற்படுகளை வடிவமைப்பதற்காக 21 பேரைக் கொண்ட இடைக்கால நிருவாக சபையொன்றும் பொதுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டது. தெரிவு செய்யப்பட்ட இந்த இடைக்கால சபையின் தலைவராக இர்பான் காதரும் உதவித் தலைவராக எம்.ரம்ஸின் அவர்களும் இணைச் செயலாளர்களாக ஏ.ஆர்.ஏ.பரீல் மற்றும் எல்.ஏ.யூ.எல்.எம்.நளீர். அவர்களும், அழைப்பாளியாக ஏ.ஜீ.எம்.நஜீப் அவர்களும், பொருளாலராக எஸ்.எச்.எம்.சியாம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். 

இந்த இடைக்கால சபை மூன்று மாதங்களுக்குள் அமைப்பை உத்தியோகபூர்வமாகத் தோற்றுவிப்பதற்குத் தேவையான அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்கின்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் குறிப்பாக 2014 ஜனவரி மாதம் நடை பெறுகின்ற  நிருவாகிகளைத் தெரிவு செய்கின்ற தேர்தலுக்கு முன்னர் இடைக்கால சபை யாப்பை வடிவமைத்து கொடுத்து அதற்கான அங்கிகாரத்தைத் தற்போதுள்ள பொதுச் சபையிடம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. என்று இடைக்கால சபையின் இணைச் செயலாளர்களில் ஒருவரான நளீர் எமக்குத் தெரிவிக்கின்றார்.


No comments

Powered by Blogger.