ஓட்டமாவடியில் டெங்கு நூளம்பு ஒழிப்பு நடமாடும் வீதியோர நாடகம்
(எம்.ரீ.எம்.பாரிஸ்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய டெங்கு நூளம்பு ஒழிப்பு வாரத்தையொட்டி பொதுமக்களுக்கு டெங்கு ஒழிப்பு விழிப்புட்டும் நடவடிக்கைகள் மாவட்டத்தில்லுள்ள ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைவாக கல்குடா தொகுதியின் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் எம்.சீ அன்சார் தலைமையில்; டெங்கு ஒழிப்பு விழிப்புட்டும் நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றது.
பிரதேச செயலகத்தின் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உதவி உத்தியோகத்தர் பீ.எம்.எம்.காசிம் அவர்களின் ஒருங்கிணைப்புடன் சிறுவர்,மற்றும் பெண்கள் அபிவிருத்தி பிரிவு ஏற்பாடு செய்திருத்த டெங்கு நூளம்பு ஒழிப்பு நடமாடும் வீதியோர நாடகம் பிரதேச செயலகப்பிரிவுகளின் சாலையோரங்கள்,பாடசாலைகள்,பொதுச்சந்தைகள், பள்ளிவாயல்கள், கிராமங்கள் தொரும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
இதன் போது பிரதேச சிறுவர்களினால் டெங்கு நூளம்பு ஒழிப்பு விழிப்புட்டும் துண்டுபிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டன
இவ்வீதியோர நாடகம் மட்ஃகாவத்தமுனை அல்-அமீன் வித்தியாலய அதிபர் எச்.எம்.எம்.இஸ்மாயில்,அந்நூர் தேசிய பாடசாலையின் ஆசிரியர் எம்.எம்.எம்.உசனார் ஆகியோரின் நெறியாள்கையில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment