இலங்கை தொடர்பான வெளிநாட்டு கொள்கை பலமானதா? இல்லையா? பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் தெரியவரும்
இலங்கை தொடர்பான பிரித்தானிய வெளிவிவகார கொள்கை குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை, பிரித்தானிய வெளிவிகார திணைக்களம் நிராகரித்துள்ளது.
நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த பிரித்தானிய நாடாளுமன்றத்தின் வெளிவிவகார பிரிவு, இலங்கை தொடர்பான பிரித்தானியாவின் வெளிநாட்டு கொள்கை தளம்பல் நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் இலங்கையில் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்ற போதும், அது குறித்து நடவடிக்கை எடுக்க பிரித்தானியா அச்சம் கொண்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.
எனினும் இதனை நிராகரித்துள்ள பிரித்தானியாவின் வெளிவிவகார திணைக்களம், இலங்கை தொடர்பான வெளிநாட்டு கொள்கை பலமானதா? இல்லையா? என்பது, எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் போது தெரியவரும் என்று குறிப்பிட்டுள்ளது.
Post a Comment