Header Ads



மத்திய மாகாண விருப்பு வாக்குகளை மீள எண்ணவேண்டும் - மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு

கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது கிடைத்த தேர்தல் பெறுபேறுகள் மீது நம்பிக்கை இருப்பதாக ஜனநாய கட்சி தெரிவித்துள்ளது. அதன் பொது செயலாளர் ஆனந்தமானவடு இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலில் கண்டி மாவட்டத்தில் இருந்து மத்திய மாகாண சபைக்கு ஜனநாயக கட்சி சார்பாக இரண்டு பேர் தெரிவாகினர்.

எனினும் அவர்களின் நியமனங்களை ரத்து செய்து, கட்சி வேட்பாளர்களின் விருப்பு வாக்குகளை மீள எண்ணவேண்டும் என்று, கட்சியின் ஒன்பது உறுப்பினர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இது சம்பந்தமாக ஜனநாயக கட்சியின் பொதுசெயலாளரிடம் கேட்ட போது, மீண்டும் விருப்பு வாக்குகளை என்னும் அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இது சம்பந்தாக இன்னும் தங்களுக்கு எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை என்று, உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.