முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை கொண்டாடும் தொலைபேசி உரையாடல்கள்
இந்தியா - உத்தரப் பிரதேச மாநிலம் முஸஃபர் நகர் கலவரத்தில் முஸ்லிம்கள் கொலை செய்யப்படுவதையும், அவர்களுடைய வீடுகள் தீக்கிரையாக்கப்படுவதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ளும் தொலைபேசி உரையாடல்கள் வெளியாகியுள்ளன.
ரிஹாய் மஞ்ச் என்ற அமைப்பு இந்த தொலைபேசி உரையால்களை வெளியிட்டுள்ளது. கலவரப் பகுதிகளில் போலீஸ் தாமதமாக வருவதை ஒப்புக்கொள்ளும் ஆதாரமும், தொலைபேசி உரையாடலில் இடம் பெற்றுள்ளது.
குத்பா, குத்பி கிராமகளில் செப்டம்பர் 8-ஆம் தேதி ஜாட்டுகள் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய மெமரி சிப்பை ரிஹாய் மஞ்ச் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் யாதவ் செய்தியாளர்களிடம் கேட்கச் செய்தார்.
உரையாடல்கள் ஒன்றில், “அவர்கள் (முஸ்லிம்கள்) கொல்லப்பட்டார்களா?” என்று பெண் குரல் கேட்கிறது. “ஆம். அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள்” என்று ஆண் ஒருவர் பதில் கூறுகிறார். இதனை உறுதி செய்த அந்தப் பெண் மீண்டும் கேட்கிறார்.”ஆம். உறுதி செய்யப்பட்டது” என்று ஆண் பதில் கூறுகிறார்.
“வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுவிட்டன” என்றும் அந்த நபர் கூறுகிறார். ”பி.ஏ.சி. (ப்ரொவிஷனல் ஆம்ட் கன்ஸ்டாபுலரி) வந்துவிட்டார்களா?” என்ற கேள்விக்கு, “அவர்களிடம் தாமதமாக வந்தால் போதும் என்று கூறப்பட்டுள்ளது” என்று பதில் குரல் கூறுகிறது.
“குத்பியில் குறைந்தது ஐந்து அல்லது ஆறு நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர்” என்று ஆண் குரல் கூறும்போது, ”நல்லது” என்று அந்தப் பெண் பதில் கூறுகிறார்.
இன்னொரு உரையாடலில் ஒரு பெண், இன்னொரு நபரிடம் கொலைகளைக் குறித்தும், தீ வைப்புகளைக் குறித்தும் தமாஷாகக் கூறிச் சிரிக்கிறார்.
“நம்முடைய கண்ணியத்தை இழந்துவிடாதீர்கள்” என்று அந்தப் பெண், ஆணின் உணர்ச்சியைத் தூண்டி விடுகிறார். இரண்டு பெண்களிடையேயான உரையாடலில், “ஹிந்துக்கள் காரியமாக எதனையும் செய்யவில்லை. எத்தனை நபர்களைக் கொன்றாலும் நாங்கள் எதுவும் செய்யமாட்டோம் என்று போலீஸ் கூறுகிறது” என்று கூறப்படுகிறது.
முஸ்லிம் கிராமங்களில் கூட்டுப் படுகொலைகள் நடப்பது குறித்தும் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை கொண்டு சேர்ப்பது குறித்தும் பல்வேறு உரையாடல்களில் கூறப்படுகிறது. கூட்டுப் படுகொலைகளை பெருமையுடன் பேசுவதும் தொலைபேசி உரையாடல்களில் இடம் பெற்றுள்ளன. thoo
Post a Comment