கல்முனை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள்
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் அனுரணையுடன் கல்முனை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் நேற்று நடைபெற்றது.
கமு/அல்மிஸ்பாஹ் வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர் ரீ.மோகனகுமார் பிரதி அதிபர் யூ.எல்.எம். அமீன் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை டாக்டர் ஏ.எல். அஜ்வத்.சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பி.எம்.அஸ்ஹர் கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்களான சம்ரினா ஹனீபா. பௌமி .எம்.எச் றினோஸ் மற்றும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
இங்கு அல்மிஸ்பாஹ் பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இவ் இணையத்தளக் குழுவிற்கோர் அன்பான வேண்டுகோள்...
ReplyDeleteதற்கால சமூகச் சீர்கேடுகளிற்கு மிகவும் பங்களிப்புச் செய்கின்ற ஓர் ஊடகமாக இணையம் அமைந்துள்ளதை யாராலும் மறுக்க முயடியாது. அந்த வகையில் தங்களின் இணையத்தில் வெளியாகின்ற அனைத்துத்த தகவல்களும் பிரயோசனமான விடயங்களாக இருந்தாலும் நடப்பு பிரதேச செய்திகளில் குறிப்பாக மேலே உள்ள பாடசாலை சர்வதேச சிறுவர் நிகழ்வுகளில் பெண்மாணவிகளின் புகைப்படங்களை பிரசுரிப்பதைத் தவிர்த்துக்கொள்வது சிறந்ததது என நினைக்கின்றேன். ஏனெனில் தற்கால சூழலுக்கு இது ஏற்றதல்ல என்பது என் கருத்து அத்தோடு இப் புகைப்படங்களில் என்னிடம் கல்வி கற்ற ஒழுக்கமான மாணவிகள் இருப்பதனாலேயே என்னை இவ்வாறு எழுதத் தோன்றியது...
உங்களின் கவனத்திற்கு இதை எடுத்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடை பெறுகின்றேன்.