Header Ads



கல்முனை மேயராக தொடர்ந்தும் சிராஸ்..? ஹக்கீமுடன் பேசுவதற்கும் தீர்மானம் (படங்கள்)


(ஹாசிப் யாஸீன்)

கல்முனை மாநகர சபையின் முதல்வராக தொடர்ந்து நான்கு வருடங்களுக்கு கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இருக்க வேண்டுமென்று சாய்ந்தமருது மக்கள் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்

கல்முனை மாநகர முதல்வர் பதவியினை இராஜினாமா செய்வது தொடர்பாக சாய்ந்தமருது மக்களின் கருத்துக்களை கேட்டறியும் கூட்டம் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடியன் கூட்ட மண்டபத்தில் நேற்றிரவு நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கல்முனை மாநகர முதல்வராக சிராஸ் மீராசாஹிப் தொடர்ந்து இருக்க வேண்டும், சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை (பிரதேச சபை) ஒன்றினை பெற்றுக் கொள்ளல், 35 வருடத்திற்கு பிறகு கிடைத்த முதல்வர் பதவியினை முழுமையாக அனுபவிப்பதற்கு சுமூகத் தீர்வு காண்பதற்கு சாய்ந்தமருது முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு கட்சித் தலைமையுடன் பேசுதல், ஊரின் அரசியல் அதிகாரம் பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர் பேசி சாதகமான தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என உள்ளடங்களாக  நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரிடம் கையளிக்கப்பட்டது.

இத்தீர்மானங்களை ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமை சந்தித்து கையளிக்கவுள்ளதுடன் தொடர்ந்தும் கல்முனை மாநகர முதல்வராக சிராஸ் மீராசாஹிப் இருக்க வேண்டும் என வலியுறுத்தவுள்ளனர்.

இக்கூட்டத்திற்கு கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.அமீர்;, எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஏ.நஸார்தீன், ஏ.எம்.நபார், எம்.முபீத் மற்றும் சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனீபா, சாய்ந்தமருது வர்தக சங்கத் தலைவர் ஏ.எல்.எம்.நஸீர்; மற்றும் உலமாக்கள், புத்திஜீவிகள், அரச அதிகாரிகள், கட்சி போராளிகள் என பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

கல்முனை மாநகர முதல்வர் இராஜினாமா இழுபறி தொடர்பாக எதிர்கால முன்னெடுப்புக்களை சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினருடன் இணைந்து வர்த்தக சங்க பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்கள் என்பன மேற்கொள்ளவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.




3 comments:

  1. சகோதரர் சிராஸ் சாய்ந்தமருது மக்களை பிழையான முறையில் வழிநடத்தப் பார்கிறார். இது ஒரு ஊர்பிரச்சினையே இல்லை. கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்றுவது தான் ஒரு சத்தியமானதும் கெளரவமானதுமான செயலாக அமையும். சாய்ந்தமருது பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் இந்த விடயத்தில் நீதியாகவும் நம்பிக்கையாளர்களாகவும் நடந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

    ReplyDelete
  2. தனது அரசியல்நாடகத்தில்முழு ஊரையும் பலிக்கடாவாக்கியுள்ளார் ...முன்னாள் முதல்வர்....வாக்கு என்பதுத்தான் ஒரு மனிதனை மனிதனாகவே காட்டுவது.........

    ReplyDelete
  3. innoru Hisbullah! Innoru Kaththan Kudi yai uruvakka aaramba vaipavam!!!

    Hisbullah, Rishad, Athavullah varisaiyil innoru kurunila mannan!

    Nichchayam 1000% ungalukku Janazipathiyin aseer vatham kidaikkum!!!

    ReplyDelete

Powered by Blogger.