பொலிசாரின் பாதுகாப்புக்கு மத்தியில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் கூட்டம் (படங்கள்)
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
பொலிசாரின் பாதுகாப்புக்கு மத்தியில் காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் அரசியல் பிரிவு ஏற்பாடு செய்த பொதுக்கூட்டமும் மக்கள் சந்திப்பும் இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி குட்வின் சந்தி என்று அழைக்கப்படும் குர் ஆன் சதுக்கத்தில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் அஷ்ஷெய்க் சபீல் நளீமி தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் வட மாகாண சபை உறுப்பினர் அஷ்ஷெய்க் அய்யூப் அஸ்மின் (நளீமி) , நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சுறா சபை அமீர் அஷ்ஷெய்க் பிர்தௌஸ் நளீமி , எப்.ஜே.பி. எனும் நீதிக்கும் சமாதானதிற்குமான முன்னணியின் தலைவர் அஷ்ஷெய்க். எம் . நஜா மொஹமத் (இஸ்லாஹி), நல்லாட்சிக்கான மக்கள் இயக்க சூறா சபை உறுப்பினர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் , நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் நஸீர் உட்பட நல்லாட்சிக்கான மக்கள் இயக்க சூறா சபை உறுப்பினர்கள் ,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது பி.எம்.ஜி.ஜி சூறா சபை அமீர பிர்தௌஸ் நளீமி, நீதிக்கும் சமாதானதிற்குமான முன்னணியின் தலைவர் நஜா மொஹமத் (இஸ்லாஹி), வட மாகாண சபை உறுப்பினர் அஷ்ஷெய்க் அய்யூப் அஸ்மின் (நளீமி), பி.எம்.ஜி.ஜி சூறா சபை உறுப்பினர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் ஆகியோரின் விஷேட உரைகளும் இங்கு இடம்பெற்றது.
இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமான இக் கூட்டம் இரவு 10 மணிவரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment