Header Ads



தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு உயர் கல்வியமைச்சர் எஸ்.பி. திசாநாயக விஜயம்

(பி. முஹாஜிரீன்)

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை (29)  உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக விஜயம் செய்தார்.

உபவேந்தர் கலாநிதி எஸ்.எம். இஸ்மாயில், பதிவாளர் எச்.அப்துல் சத்தார் மற்றும் பல்கலைக்கழக பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

பல்கலைக்கழகத்தின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் தற்கால செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்ட அமைச்சர் திஸாநாயக்க பல்கலைக்கழகத்தில் பதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற பீடங்களுக்கான கட்டடத் தொகுதிகள் மற்றும் அபிவிருத்தி வேலைகளை பார்வையிட்டார்.

No comments

Powered by Blogger.