Header Ads



"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெளியிட்டுவரும் கருத்துகள் நாட்டுக்கு ஆபத்தானவை'' - ரத்ன தேரர்

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெளியிட்டுவரும் கருத்துகள் நாட்டுக்கு ஆபத்தானவையாகும். தமிழ் மக்களை நினைவில் வைத்து அவர்கள் தமது கருத்துகளை வெளியிட வேண்டும்'' என்று எச்சரித்துள்ளது அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக  ஹெல உறுமய.   

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டில் பிரிவினை வாதத்தைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கக் கூடாது'' என்று அந்தக் கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்னதேரர் நேற்று தெரிவித்தார்.   

"நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை எவ்வாறு கனடா சுயமாக சிந்தித்துப் புறக்கணித்ததுபோல இந்தியாவும் புறக்கணிக்க வேண்டும்'' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த அவர், மேலும் தெரிவித்ததாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் அரசின் செயற்பாடுகளுக்கு திர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இது மிகவும் மோசமான செயற்பாடாகும். கூட்டமைப்பினரும் இலங்கை நாட்டு பிரஜைகள் என்பதை மறந்து விடக்கூடாது. நம் நாட்டில் இப்படி ஒரு பொதுநலவாய மாநாடு நடைபெறுவது அனைவருக்குமே கெளரவமாகும். இதில் சிங்களவர், தமிழர் என்ற பாகுபாடு பார்க்கக் கூடாது.   ஆனால், கூட்டமைப்பினர் தொடர்ந்தும் நாட்டில் துவே­த்தைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதையே தமது வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் கருத்துகள் எதிர்காலத்தில் நாட்டின் ஒற்றுமைக்கே பங்கம் விளைவிக்கும் அளவிற்கு ஆபத்தானவையாகும். 

இதைத் தமிழர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.   இலங்கையில் துவே­சம் இருக்கக் கூடாது. அனைவரும் ஒற்றுமையாக வாழவேண்டும். தமிழர்களும் இந்நாட்டின் பிரஜைகளே. அதனால், கூட்டமைப்பினர் தமிழர்களைப் பற்றியும் சிந்தித்துப் பார்த்தே கருத்துக்களை வெளியிட வேண்டும்.   நாட்டைப் பிளவுபடுத்தும் தமிழ்க் கூட்டமைப்பின் இதுபோன்ற கருத்துகள் உடன் நிறுத்தப்பட வேண்டும். இதனால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றியும் இவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்'' என்றார். - 

No comments

Powered by Blogger.