முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவசரமாக கொழும்புக்கு அழைப்பு
கல்முனை மாநகர சபை முதல்வர் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீம் மாநகர சபை உறுப்பினர்களை அவசரமாக கொழும்புக்கு அழைத்துள்ளார்.
கல்முனை மாநகரசபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இக்கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இக்கூட்டம் நடைபெற இருந்த வேளை கல்முனை முதல்வர் சிராஸ் மீராசாஹிப் முதல்வர் பதவியை இராஜினாமா செய்யக் கூடாதென பிரகடனம் செய்யப்பட்டதை அடுத்து இந்த கூட்டம் இடை நிறுத்தப் பட்டுள்ளதாக மற்றுமொரு தகவல் கூறுகிறது.
Post a Comment