Header Ads



கல்முனை, சாய்ந்தமருது மீனவர்களின் சொத்துக்கள் நடுக்கடலில் களவுபோகும் பரிதாபம்


(யு.எம்.இஸ்ஹாக்)

கல்முனை சாய்ந்தமருது பிரதேச முஸ்லிம் மீனவர்களின் வலை,மற்றும் மீன்கள்  நடுக்கடலில்  களவெடுக்கப்படுவதாக கல்முனை பொலிசில்  முறைப்பாடு செய்யப் பட்டுள்ளது . கடற்படையினரின் உதவியுடன்  இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக  மீனவர்களுக்கு கல்முனை பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி  தெரிவித்துள்ளார் .

இச்சம்பவம்  தொடர்பாக தெரிய வருவதாவது,

 கல்முனை ,சாய்ந்தமருது பிரதேசத்தை  சேர்ந்த  ஆழ் கடல் மீனவர்கள் இரவு நேரத்தில் மீன்பிடிக்க வலையை கடலில் போட்டுவிட்டு  கண்விழித்துக் காத்திருக்கும்  சமயத்தில்   தங்கள் வலையில் பிடிபட்டு கிடக்கின்ற  மீன்களை களவில் எடுத்து செல்வதாகவும்  சில வேளை  வலையை வெட்டி செல்வதாகவும்  மீனவர்கள் தெரிவிக்கின்றனர் .

மட்டக்களப்பு  மாவட்டத்தின்  களுவாஞ்சிகுடி  பிரதேசத்தை சேர்ந்தவர்களும் ,அம்பாறை மாவட்டத்தின்  காரைதீவை சேர்ந்தவர்களுமே தங்கள் மீனையும் ,வலையையும் களவெடுப்பதாக  பொலிசில் மீனவர் சங்கங்களினால்  முறைப்பாடு செய்ப்பட்டுள்ளது. 

இந்த விடயம் தொடர்பாக  பொலீசாருக்கும் ,மீன்பிடி திணைக்களத்துக்கும்  அறிவித்தும்  நடவடிக்கை எடுக்கப் படாமையால்  இதனை கண்டித்து  கல்முனை ,சாய்ந்தமருது மீனவர்கள்  08.10.2013 கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல்  பகிஸ்கரிப்பு செய்ததுடன்  நாளை 09 கண்டன ஆர்ப்பாட்டம் செய்வதர்க்கும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது .

இதனை தடுத்து நிறுத்தும் வகையிலேயே  கல்முனை போலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு.கப்பார் தலைமையில்    இரவு 7.00 மணிக்கு கல்முனை பொலிஸ்  நிலையத்தில்  அவசரமாக இடம் பெற்ற பேச்சுவார்த்தையின் போதே  கடற்  படையினரின்  உதவியுடன்  இந்த களவை கட்டுப்படுத்த  நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.