'வார உரைகல்' பிரதம ஆசிரியர் (புவி) றஹ்மத்துல்லா கைது
(tm) காத்தான்குடியிலுள்ள 'வார உரைகல்' எனப்படும் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான எம்.ஐ.எம்.றஹ்மத்துல்லா(புவி) கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது வீட்டில் கஞ்சா வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டிலேயே காத்தான்குடி பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் இன்று வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி பத்திரிகையின் ஆசியரின் வீட்டுக்கு பொலிஸ் மோப்ப நாயுடன் இன்று 31-10-2013 காலை சென்ற பொலிஸ், தேடுதல் நடத்தியது. இதன்போது அவரது வீட்டிலிருந்து கஞ்சா கட்டு ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதையடுத்து மேற்படி பத்திரிகையின் ஆசிரியரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா 198 கிராம் எனவும், இவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
முக்கிய குறிப்பு - இது ஒரு பக்கம் சார்ந்த செய்தியே. விரைவில் இதன் உண்மை நிலையுடன் கூடிய செய்தி பதிவேற்றம் செய்யப்படும்.
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் மகள் பெண் ஒருவருடன் காணப்படும் புகைப்படத்துடன் கூடிய செய்தியை புவி ரஹ்மத்துல்லாஹ் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் மகள் பெண் ஒருவருடன் காணப்படும் புகைப்படத்துடன் கூடிய செய்தியை புவி ரஹ்மத்துல்லாஹ் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் நடப்பது போல இதுவும் ஒரு நாடகமாக இருக்குமோ..
ReplyDeleteஇது நிச்சயமாக ஒரு நரியனுடைய வேளையாகத்தான் இருக்க வேண்டும்.
ReplyDeleteபழைய டெக்னிக்கை பயன்படுத்தி ஒரு பத்திரிக்கை ஆசிரியரை காது செய்துள்ளனர். இதன் மூலம், நாற்பதாயிரம் பேருக்கு மட்டும் தெரிந்திருந்த ஹிஸ்புல்லாஹ்வின் மகனின் அன்னியப் பெண்ணுடனான காதல் லீலைகள், நாலு கோடிப் பேருக்கு தெரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ReplyDeleteஇவர் ஒரு பத்திரிக்கை ஆசிரியர், ஊடகவியலாளர் என்கின்ற வகையில், மனித உரிமை அமைப்புகள், எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு, லண்டன் BBC போன்றவற்றிட்கும் ஹிஸ்புல்லாஹ்வின் மகனின் வில்லங்க விவகாரம் பகிரங்கமாகப் போகின்றது.
சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி.