Header Ads



கஞ்சா விற்பனையில் இறங்கப் போவதாக அறிவித்துள்ள அரசு

தென் அமெரிக்காவில் உள்ள, உருகுவே நாட்டு அரசு, கஞ்சா விற்பனையில் இறங்கப் போவதாக அறிவித்து உள்ளது. இதன் மூலம், உருகுவே குடிமக்களுக்கு, தரமான கஞ்சா, ஒரு கிராமிற்கு, ஒரு அமெரிக்க டாலர் என்ற விலையில் கிடைக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொலம்பியா, வெனிசுவேலா, உருகுவே உள்ளிட்ட, சில தென் அமெரிக்க நாடுகளில், "கொக்கேய்ன்' போன்ற கொடிய போதைப் பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல், கட்டுக்கடங்காமல் நடந்து வருகிறது. இதே போல், மெக்சிகோ நாட்டிலும், இந்த பிரச்னை தலைவிரித்து ஆடுகிறது. இதன் விளைவுகளான, வன்முறை, போதைப் பொருளுக்கு அடிமையாதல் உள்ளிட்ட சமூக பாதிப்புகளை, பல ஆண்டு முயற்சிக்கு பிறகும், கட்டுப்படுத்த முடியாததால், பொருளாதார ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள, இந்த அரசுகள், முடிவு எடுத்துள்ளன. 

அதாவது, போதை பொருட்களில் விலையும், பாதிப்பும் குறைந்ததான, கஞ்சாவின் பயன்பாட்டை, சட்டப்பூர்வமாக அனுமதிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என, முடிவு செய்துள்ளன. இதனால், விலை உயர்ந்த கொடிய போதை பொருட்களின் பயன்பாடு குறையும் என்றும், கொடிய போதைப் பொருட்களை தயாரிக்க தேவைப்படும் தாவரங்களை, சட்ட விரோதமாக வளர்க்கும் விவசாயிகள், கஞ்சா பயிருக்கு மாறுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், உருகுவே நாட்டில், கஞ்சா பயன்பாட்டை அனுமதிக்கும் சட்டம், விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த சட்டப்படி, ஒவ்வொரு நபரும், மாதம், 40 கிராம் வரை கஞ்சா வாங்கி, பயன்படுத்தலாம். அதை செயல்படுத்தும் வகையில், விவசாயிகள் வளர்க்கும் கஞ்சாவை, அரசே அறுவடை செய்து, அரசு அங்காடிகள் மூலம் விற்பனை செய்ய உள்ளது. ஒரு கிராம், கஞ்சாவின் விலை, ஒரு அமெரிக்க டாலர் (61 ரூபாய்) என, நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

No comments

Powered by Blogger.