அட்டாளைச்சேனை வாகன விபத்தில் பலியானவர் அடையாளம் காணப்பட்டார்
அட்டாளைச்சேனை வாகன விபத்தில் பலியானவர் அடையாளம் காணப்பட்டார்.
நேற்று அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் முச்சக்கர வண்டி விபத்தில பலியானவர் நிந்தவூர் அட்டப்பளத்தை சேர்ந்த 34 வயதான கோபாலப்பிள்ளை கோவிநாதன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பலியானவரின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் திரீத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் இதுவரைக்கும் அடையாளம் காணப்படவில்லை. அக்கரைப்பற்று பொலிசார் மேற்படி சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment