Header Ads



நூரியா ஜூம்ஆ பள்ளிவாயல், ஸ்ரீ புத்த ஜயந்தி விகாரைக்கு அன்பளிப்பு செய்த முச்சக்கர வண்டி (படங்கள்)


(அனா)

இன நல்லுரவைப் பேனும் வகையில் வாழைச்சேனை – பிறைந்துரைச்சேனை நூரியா ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தினரால் வாழைச்சேனை ஸ்ரீ புத்த ஜயந்தி விகாரைக்கு முச்சக்கர வண்டி ஒன்று நேற்று (22.10.2013) அன்பளிப்புச் செய்யப்பட்டது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் பள்ளிவாயல் நிருவாக சபைத் தலைவர் எம்.பதுர்தீன் மற்றும் நிருவாக சபை உறுப்பினர்கள் ஸ்ரீ புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி பூஜ நாவாநே அபயவன்ஸ லங்கார தேரோவிடம் முச்சக்கர வண்டியை ஒப்படைத்தனர்.

இதே வேளை யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் வாழைச்சேனை ஸ்ரீ புத்த ஜயந்தி விகாரையினால் வருடாந்தம் நடாத்தப்படும் வீதி ஊர்வல உற்சவமும் அன்னதான நிகழ்வும் நேற்று முந்தினமும் (21.10.2013) நேற்றும் (22.10.2013) இடம் பெற்றது.

நேற்று முந்தினம் திங்கள் கிழமை மாலை வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக சந்தியில் இருந்து ஆரம்பமான வீதி ஊர்வலம் (பெரகெர) வாழைச்சேனை ஸ்ரீ புத்த ஜயந்தி விகாரையை வந்தடைந்ததுடன் நேற்று விஷேட பூஜைகள் விகாரையின் பிரதம விகாராதிபதி பூஜ நாவாநே அபயவன்ஸ லங்கார தேரோ தலைமையில் இடம் பெற்றதோடு அன்னதானமும் இடம் பெற்றது.





3 comments:

  1. How about this food this is ok eat?

    ReplyDelete
  2. There area many Muslim girls are trying to go abroad but these kaseem babaa what they are doing, until there are no good faith with Allah, Allah never guide and safe these kaseemkal

    ReplyDelete
  3. இன மத நல்லுறவு என்பதற்கும், இறை நிராகரிப்பான ஒரு மதத்தின் கொள்கைகள், நிகழ்வுகள், சடங்குகளுடன் இரண்டறக் கலந்து விடுவதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை முஸ்லிம்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

    குளிக்கப் போய் சேறு பூசிக்கொள்ளக் கூடாது.

    ReplyDelete

Powered by Blogger.