யாழ்ப்பாணம் - நாவாந்துறை மக்களின் முன்மாதிரி..!
யாழ்ப்பாணத்திலுள்ள கோட்டை பிரதேசத்திலிருந்து 1590இல் போர்த்துக்கீஸரால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது அவர்களில் சிலர் யாழ் சோனகதெரு பிரதேசத்தில் குடியிருந்தனர். போர்த்துக்கீஸரால் கடல்தொழில்களை செய்வதற்காக இந்தியாவிலிருந்து சிலர் அழைத்துவரப்பட்டிருந்தனர். 1658 இல் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போது இந்த மக்களை கைவிட்டு போர்த்துக்கீஸர் ஓடி விட்டனர். இவர்கள் தொழிலில்லாமல் இருந்த காலத்தில் யாழ்ப்பாணத்து முஸ்லிம்களே இவர்களுக்கு உதவி செய்ததுடன் இவர்களை நாவாந்துறைக்கடலில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுத்தினர். இவர்கள் நான்கு பிரிவினர்களாக நாவாந்துறையை அண்டி வாழ்கின்றனர். இவர்களில் நாவாந்துறை சென் நீக்கிலஸ் பிரிவனர் 1990 இல் 500 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3000 மக்கள் நாவாந்துறை தெற்கில் வாழ்ந்து வந்தனர். 1990 ஆம் ஆண்டிலும் அதற்கு பிற்பாடும் இம்மக்களில் சிலர் ஐரோப்பிய நாடுகளில் குடியேறியுள்ளனர். அவர்களின் தொகை சுமார் முன்னூறு நபர்களாகும்.
2009 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் நிலமை வழமைக்கு திரும்பிய பின்னர் வெளிநாடுகளில் வாழ்ந்த சென் நீக்கிலஸ் மக்கள் ஒன்று சேர்ந்து தமது ஊருக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற அடிப்படையில் நாவாந்துறைக்கு விஜயம் செய்து மக்களின் தேவைகளை கண்டறிந்தனர். அதனடிப்படையில் தங்களுடைய விளையாட்டு மைதானம் புனரமைத்து தரவேண்டுமென்றும் தமது தேவாலயத்தை புதுப்பிக்க உதவ வேண்டுமென்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுனர்.
இதன் பிரகாரம் வெளிநாடுகளில் வாழும் சென்நீக்கிலஸ் மக்கள் ஏறக்குறைய ஐம்பது இலட்சங்கள் செலவில் மைதானத்துக்கு மண்ணிட்டு நிரப்பியுள்ளதுடன் சுற்றுமதில் அமைத்து இரண்டாயிரம் பேர் உட்காரக்கூடிய அளவில் பவுலியனும் அமைத்துக் கொடுத்துள்ளனர். அத்துடன் தமது கிறிஸ்தவ தேவாலயத்தை இரண்டு கோடி செலவளித்து புதிதாக கட்டியுள்ளனர்.
எமக்கு அண்மையில் உள்ள நாவாந்துறை சமூகம் இவ்வாறிருக்க எமது புலம்பெயர் யாழ் முஸ்லிம்களின் செயற்பாடுகள் கேள்விக்குறியாகவே உள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் 400 பேரும் பிரான்ஸில் முன்னூறு பேரும் அவுஸ்திரேலியாவில் 50 பேருமாக எல்லா வெளிநாடுகளிலும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த முஸ்லிம்கள் ஆயிரம் பேர் வாழ்கின்றனர். இவர்கள் யாழ்ப்பாணம் சோனகதெருவை மீளக்கட்டியெழுப்ப என்ன செய்தார்கள்? அங்குள்ள வணக்கஸ்தலங்களை பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் எடுத்தார்கள்? புத்தளத்திலும் ஏனைய ஊர்களிலுமுள்ள யாழ் முஸ்லிம்களுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்தார்கள் என்றெல்லாம் என்றெல்லாம் யாழ்ப்பாணத்தில் அண்மையில் சந்தித்த முதியவர் ஒருவர் கேள்விகளை எழுப்பிக் கொண்டே போனார்.
வெளிநாடுகளிலுள்ளவர்களில் பிரித்தானியா வாழ் சகோதரர்கள் செய்துள்ள சில வேலைகளை குறிப்பிட்ட போது அவர்கள் நீண்ட காலத்திட்டமின்றி உடனடி நிவாரண நடவடிக்கைகள் சிலதை செய்துள்ளனர். பள்ளிவாசல்களுக்காக சில காணிகளை வாங்கி அதனை வக்பு செய்து அதில் சில அறைகளையோ சிறு வீடுகளையோ அமைத்து அதன் மூலமாக பள்ளிவாசல்களை பாதுகாக்க ஏற்பாடு செய்திருக்கலாம். அல்லது தாம் சரி தமக்கென்று ஒரு காணியை யாழ்ப்பாணத்தில் வாங்கி அதனை திருத்தி முஸ்லிம்களுக்கு வாடகைக்கு கொடுப்பதன் மூலம் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் சனத்தொகையை அதிகரிக்கலாம், பொம்மைவெளியில் ஒரு பரப்பு காணி ஒன்றரை இலட்சத்துக்கு விற்கப்படுகிறது அவற்றை சரி வாங்கி சிறு கொட்டில்களை அமைத்து நமது மக்களுக்கு கொடுத்திருக்கலாம் என்று பல திட்டங்களை அடுக்கிக் கொண்டே போனார்.
இலங்கையிலுள்ள சில செல்வந்தர்கள் மற்றும் சிலர் பல வேலைகளை செய்துள்ளனர். யாழ் ஒஸ்மானியா ஓல்ட் போய்ஸ் மைதானத்தின் பின்புறச் சுவரை 10 இலட்சம் செலவளித்து கட்டியுள்ளனர். வெளிநாடுகளில் இலட்சக்கணக்கில் உழைப்பவர்கள் ஆளுக்கு ஒரு 25000 ரூபாவை வருடத்துக்கு ஒதுக்கினாலும் 500 பேர் அவ்வாறு பணம் தந்தாலே ஒரு கோடி இருபத்தைந்து இலட்சம் சேரும். அதை வைத்து எவ்வளவு பெரிய வேலைத்திட்டங்களை செய்யலாம். சகாத் பணத்தை சரி சேகரித்து கூட்டு முறையில் ஏதாவது செய்யலாமே.
மனமிருந்தால் எதுவும் செய்யலாம் என்று கூறிவிட்டு அந்த 82 வயது முதியவர் கூறி விட்டு சென்று விட்டார்.
Good Idea, masha allah.
ReplyDeleteபுதிதாக தெரிவாகியுள்ள மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் மெளலவி தலைமையில் இந்த பணிகள் மேட்கொள்ளபப்டல் வேண்டும். அவர் யாழ் முஸ்லிம்களுக்கு தெளிவான தலைமைக்கு பொருத்தமானவராக இருப்பார் என்பது பலரது உறுதியான நம்பிக்கை ஆகும்.