Header Ads



ஊடகவியலாளர் சந்திப்புக்கு அழைப்பு

(எம்.எம்.ஏ.ஸமட்)

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை தெளிபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்புக்கு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் 2013ஆம் வருடத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இந்த அபிவிருத்தித்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பிலும் அமைச்சின் கீழ் இயங்கும் கிழக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களமும் மத்திய நீர்ப்பாசன திணைக்களமும் இணைந்து அட்டாளைச்சேனையில் நடத்திய 2013க்கான நீர்பாசன வாரம் தொடர்பாகவும் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிமித்தம்  ஊடகவியலாளர்களைச் சந்திக்கவுள்ளதாக  அமைச்சர்  எம்.எஸ்.உதுமாவெப்பை தெரிவித்தார்.

இவ்வூடகவியலாளர் சந்திப்பு  நவம்பர் 2ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு அட்டாளைச்சேனை லொயிட்ஸ் ஹோட்டலில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.