Header Ads



ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாதுகாக்கிறார் - சஜித் பிரேமதாச

ஐக்கியதேசிய கட்சியின் தலைவா் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சில கட்சியின் மூத்த உறுப்பினா்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாதுகாத்துள்ளதாக  சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். 

மாத்தறையில் இன்று 05-10-2013 மக்கள் நடத்திய ஆா்ப்பாட்டம் குழப்பமடைந்தமைக்கு அரசாங்கம்தான் காரணம் என்று கூறிய அவா் ஆர்ப்பாட்டத்தை நிறுத்த வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவின் மூலமாக ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பட்டுள்ளார் என சஜித் கூறியதாக உள்ளக தகவல்கள் கூறுகின்றன. 

சம்பவத்தின் பின்னர் கட்சியின் மூத்த உறுப்பினா்கள் சிலருடன் கலந்துரையாடியபோது சஜித் பிரேமதாச இவ்வாறு கூறியதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்தன. ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்தி அவரை தலைப் பதவியில் இருந்து விலக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறபப்டுள்ளது. gtn

1 comment:

  1. இது ஒன்றும் புதிய கதை வசனம் அல்லவே.....? எல்லோரும் அறிந்த உன்மையும் தான். அதுமட்டுமா... வடமேல்மாகான முதலமைச்சர் தயாசிரி ஜயசேகரா கூட கௌரவ ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரிதும் கடமைப்பட்டவர்தானே......!!! அத்துடன் ஜொன்சன் பெர்னாந்து கூட இந்த 'ஆயுட்கால' எதிர்க்கட்சித்தலைவரின் ஆசீர்வாதத்துடன்தான் கட்சிதாவினார். மொத்தத்தில் யில் கட்சி மாறியவர்களை இந்த எதிர்க்கட்சித்தலைவர் 'மாற்றினார்' என்றுதான் சொல்லவேன்டும்.... இதுதான் 'அரசியல்'

    ReplyDelete

Powered by Blogger.