Header Ads



கோழிக் குஞ்சுகள் வழங்கிவைக்கும் நிகழ்வு


(எஸ்.எல். அப்துல் அஸீஸ் + எ.பி.எம்.அஸ்ஹர்)

திவிநெகும மனைப்பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை கல்முனை பிராந்திய கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

கல்முனைப் பிரதேசசெயலகப் பிரிவுக்குட்பட்ட 29 பிரிவுகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 290 குடும்பங்களுக்கு 2900 கோழிக்குஞ்சுகள் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டது.

கல்முனைப் பிராந்திய கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.ஜிப்ரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம். ஜுனைட், பிரதேசசெயலாளர் எம்.எம்.நௌபல், பிரதேச செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் டீ.மோகனக்குமார் உட்பட அதிகாரகள் பலரும் கலந்து கொண்டனர்.



No comments

Powered by Blogger.