இலங்கையில் விஷ ஊசி ஏற்றி இருவர் தற்கொலை
(Tv) காதலனும் காதலியும் தமக்குத் தாமே விஷ ஊசி ஏற்றி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் வெள்ளவாய - எல்ல பிரதான பாதையின் ரந்தெனிய காட்டுப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. வெள்ளவாய பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, விரைந்த பொலிசார் பிற்பகல் மேற்படி இருவரது சடலங்களை மீட்டனர். அத்துடன் விஷக் குப்பியொன்றும் ஊசியொன்றையும், அடையாளங்களை உறுதிப்படுத்தும் ஆவணமொன்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
மருத்துவமனையில் சேவையாற்றும் தாதி ஒருவரும் கடற் படையில் கடமை யாற்றும் கடற் படை வீரர் ஒருவருமே தற்கொலை செய்துகொண்ட வர்களென்று, ஆரம்ப விசாரணையின் போது தெரிய வந்துள்ளது. தற்கொலை செய்து கொண்ட தாதி சூரியகமை என்ற இடத்தைச் சேர்ந்தவ ரென்றும், கடற்படை வீரர் பதுளையைச் சேர்ந்த வாசனாகம என்ற இடத்தைச் சேர்ந்தவராவார்.
இவ் விருவரும் தத்தமது வீட்டாருக்கு தாம் தற்கொலை செய்துகொள்வதாக கடிதங்களையும் அனுப்பியுள்ளனர். அதன் பிறகே விஷ மருந்துடனான ஊசியை ஏற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இவ் விருவருக்கும் ஏற்கனவே திருமணம் முடித்து இரு குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையிலேயே இருவரும் புறம்பாக காதல் வலையில் சிக்கியிருந்தனர்.
தற்கொலை செய்து கொண்ட தாதி தனது கணவனுக்கும் தற்கொலை செய்து கொண்ட கடற்படை வீரர் தனது மனைவிக்கும், இரு குழந்தைகளுக்கும் தனித்தனியாக கடிதங்களை தபாலில் சேர்ந்துவிட்டே இவ்விருவரும் விஷ ஊசி ஏற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
Post a Comment