Header Ads



கெசினோ சூதாட்ட சட்டமூலத்தை தோற்கடிக்க முன்வருமாறு முஜீபுர் ரஹ்மான் அழைப்பு

முஸ்லிம்கள் வழும் பகுதியில் கெசினோ (சூதாட்ட கலியாட்ட) நிலையம் அமைப்பது எமது சமூகத்தை சீறழிக்கும் என்பதை உலமாக்களும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் புத்திஜீவிகளும் உணர்ந்து அதனை எதிர்க்க முன்வர வேண்டும் என மேலமாகாண சபை (UNP) உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அபிவிருத்தி திட்டத்தின் பேரில் முஸ்லிம்களின் காணிகளை சுவீகரித்து அநாச்சாரமான கெசினா (சூதாட்ட கலியாட்ட) நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெ ளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பு - 02 கிலானி வீதி மற்றும் ஜஸ்டிக் அக்பர் மாவத்தை ஆகியவற்றிற்கு இடையில் இருக்கும் காணிகளை அரசாங்கம் சுவீகரித்து சூதாட்ட கலியாட்ட (கெசினோ) நிலையத்தை அமைப்பது தொடர்பிலான சுற்று நிறூபத்தை கடந்த செப்டெம்பர் மாதம் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன வெ ளியிட்டிருந்தார்.

அரசு கம்பனித் தெரு பகுதியில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கப்போவதாக கூறி மக்களை இங்கிருந்து வெ ளியேற்றியது. ஆனால் இன்று அங்கு சூதாட்ட கலியாட்ட நிலையங்களை அமைப்பதற்கு திட்டமிட்டள்ளமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கொழும்பு கம்பனித் தெரு பகுதியில் 10 பள்ளிவாசல்கள் இருக்கின்றன. பௌத்தர்களின் முக்கியம் வாய்ந்ததும் பிரத்தி பெற்றதுமான கங்காராம விகாரை உட்பட நான்கு பௌத்த விகாரைகள் இருக்கின்றன. அத்தோடு மூன்று கோயில்களும் அப்பிரதேசத்தில் காணப்படுகின்றன. இரண்டு கிரிஸ்தவ தேவாலயங்களும் குறித்த பிரதேசத்தில் உள்ளன. இவ்வாறு மூவ்வின சமய வழிபாட்டுத்தலங்களும் இருக்கும் இப்பிரதேசத்தி சூதாட்ட கலியாட்ட நிலையங்கள் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளமையானது மத கலாசரங்களை அவமதிக்கும் செயலாகும். 

ஜனாதிபதி பௌத்த மக்களிடையே தான் சிறந்த பௌத்தன் என காட்டிக்கொண்டிருக்கின்றார். ஆனால் தற்போது பௌத்தர்களின் முக்கியத்துவம் வாய்ந்த விகாரை இருக்கும் பகுதியில் அநாச்சாரங்கள் நடைபெறும் நிலையங்களை உருவாக்குவனூடாக ஜனாதிபதியின் வேஷம் கலைந்துள்ளது.

இங்கு சூதாட்ட நிலையங்கள் அமைக்கப்பட்டால், அதற்கு தேவையான மதுபான சாலைகள், விபச்சார விடுதிகள் போன்றன அமைக்கப்படும். இதுவே சூதாட்ட காரர்களுக்கு தேவையான ஏனைய சேவைகள். அதனையம் அரசு அப்பகுதியில் அமைக்கும்.

இவ்வாறு கொழும்பில் இருக்கின்ற இளைஞர் யுவதிகளின் வாழ்கையை நாசமாக்கும் திட்டங்களை முன்னெடுப்பதானது எமது எதிர்கால சந்தததியினரை இல்லாது செய்ய முன்னெடுக்கப்படும் செயற்பாடாகும். எனவே இதனை தடுப்பது கொழும்பில் வசிக்கின்ற மக்களின் பொறுப்பாகும்.

இந்த அரசாங்கம் அபிவிருத்தி செய்வதாக சொல்லிக்கொண்டு கம்பனி விதி மட்டுமல்ல முழு கொழும்பையுமே கெசினோ (சூதாட்ட கலியாட்ட) நிலையமாக மாற்றி சூதாட்டத் தொழிலாளர்களுக்கு விற்க முயற்சிக்கிறது.

அன்மைக்காலமாக மாளிகாவத்தை - அப்பிள்வத்தை மக்களை வெளியேற்றி அக்காணிகளை சுவீகரிக்க திட்டமிடுவது அப்பகுதியளிலும் கெசினோ (சூதாட்ட கலியாட்ட) நிலையங்களை அமைப்பதற்கா என சந்தேகிக்க வேண்டியுள்ளது.

இன்று அரசியல் வாதிகல் அபிவிருத்தி எனும் போலி வார்த்தைகளை கூறி மக்களின் காணிகளை அபகரித்து வியாபாரிகளுக்கு கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது.

கலாசாரம் மதச் சுதந்திரம் போன்றவற்றிற்கு சவாலாக இருக்கின்ற இது போன்ற மோசமான திட்டங்களை தடுக்க மக்கள் இன மத பேதமின்றி முன்வரவேண்டும்.

அரசிலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் அரசின் பங்காளிகளாக இருக்கின்ற முஸ்லிம் கட்சிகள் கெசினோ (சூதாடட கலியாட்ட) நிலையம் அமைக்கப்படுவது தொடர்பில் எந்த கருத்துக்களையும் தெரிவிக்காது மௌனிகலாக இருக்கின்றனர். இவர்கள் இது தொடர்பிலான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.

90 வீதம் முஸ்லிம்கள் வாழும் பகுதியில் கெசினோ (சூதாட்ட கலியாட்ட) நிலையம் அமைப்பது தொடர்பிலான சட்டமூலம் எதிர்வரும் 24 ஆம் திகதி பாராளுமன்றித்திக்கு கொண்டு வரப்படவுள்ளது. அதனை தோற்கடிக்க முஸ்லிம் பிரதிநிதிகள் முன்வர வேண்டும். அப்படியில்லாது இவர்களும் அதற்கு ஆதரவளித்தால், தலை நகரில் வசிக்கின்ற முஸ்லிம்களின் வாழ்க்ளை சீறழிவதற்கு துனை போவதாய் அமையும்.

சூதாட்டம், மது போதை, விபச்சாரம் என்பன முழு மனித சமுதாயத்தினது கலாசாரத்திற்கும் மதத்திற்கும் எதிரானது. இஸ்லாம் கூடு இவற்றை மிகவும் வெறுக்கிறது. இவையே பாவங்களினதும் குற்றச் செயல்கன் அத்திவாரங்களாக இருக்கின்றன. அவை பெரிய பாவங்களும் கூட. ஆக இவற்றை நமது சமூகத்திற்கு மத்தியில் புகுத்துவது நம்மை சீறழித்துக்கொள்வதற்கு சமனாகிவிடும். இதனை ஆரம்பத்திலேயே தடுத்து விட வேண்டும். எனவே உலமாக்கள் இதனை முன்னின்று தடுக்க வேண்டும். மார்க்க விடயங்களை அறிந்த அவர்கள் மௌனமாக இருந்து மக்களை பாதாலத்திற்குள் தள்ளிவிடக் கூடாது. அத்தோடு புத்திஜீவிகளும் கல்விமான்களும் இவ்வாறான மோசமான திட்டங்களின் எதிகால விளைவுகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு அழுத்தும் கொடுக்க முன்வர வேண்டும்.

No comments

Powered by Blogger.