சகல மாவட்டங்களிலும் மின்சார வேலிகளை அமைக்க நடவடிக்கை
(எம்.எம்.ஏ ஸமட்)
காட்டு யானைகளிலிருந்து மக்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பதற்காக சகல மாவட்டங்களிலும் மின்சார வேலிகளை அமைக்க வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
காட்டு யானைகள் அழிவடைவதைத் தவிர்ப்பதற்கும் மக்களை யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்குமாக 34 மில்லியன் அமெரிக்க டொலர் நிதிச் செலவில் இந்த மின்சார வேலிகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அது தவிர, யானைகளின் நடவடிக்கைகளிலிருந்து தமது உயிரையும் சொத்துக்களையும் சாத்தியமான முறையில் பாதுகாப்பபது தொடர்பாகவும், யானைகளில் உணவு தேடல் மற்றும் அதன் இயற்கையான நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாது வாழ்வது தொடர்பாகவும் விவாயிகளையும் பொதுமக்களையும் வழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளை வனஜீவராசிகள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
அத்துடன், பல்வேறு காரணங்களின் நிமித்தம் கடந்த 5 வருடங்களில் 1,184 யானைகள் இறந்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் காடுகளை அண்டிய பல கிராமங்கள் மட்டு;மன்றி நகரப் புறங்களும் யானைகளின் தொல்லைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அண்மைக்காலமாக ஆளாகி வருகிறது.
இது தொடர்பில் உரிய நடவடிக்கை வனஜீவராசிகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படவில்லை என்று பல தரப்புக்களினாலும் குற்றஞ்சுமத்தப்பட்டு வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
Post a Comment