மாவனல்லை - ஓவத்தையில் போதைப்பொருள் பாவனையின் விபரீத விழிப்புணர்வு நிகழ்ச்சி
(ஆபூ ஹம்ஸா)
மாவனல்லையில் அமைந்திருக்கின்ற ஒரு சிறிய கிராமமான ஓவத்தையிலே கல்வி மேம்பாடு ,சமூக மேம்பாடு, பொது உறவுகளை மேம்படுத்தல், அந்நிய சமூகங்களுடனான உறவுகளை வழுப்படுத்தல் போன்ற சிறந்த பல பணிகள் நடைபெற்று வருகின்றன அல்ஹம்துலில்லாஹ். இவற்றை ஓவத்தை மஸ்ஜித் நிர்வாகமும் ஓவத்தையிலே ஆக்கபூர்வமாக இயங்கி வருகின்ற இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் ஒரு அங்கமான உஸ்ரா அமைப்பும் செய்து வருவரு குறிப்பிடத்தக்கது.
இன்று எமது சமூகம் எதிர்நோக்கியுள்ள ஒரு பாறிய சவாலே மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் பரவி வருகின்ற போதைப்பொருள் பாவனையாகும். இதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று இப்போதைப்பொருள் பாவனையின் விபரீதம், இது ஏன் சந்தைக்கு வருகிறது, இதற்கு ஒருவன் தன்னை அறியாமலேயே எப்படி பலக்கப்படுகிறான் என்ற போதிய அறிவு அல்லது விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் இல்லாமையாகும்.
அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாம் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்குமான ஒரு போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடாத்தினோம். இந்நிகழ்ச்சியை ஹெம்மாதகம அல் அஸ்ஹர் பாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர் நுஷ்ரான் அவர்கள் நடாத்தி வைத்தார்கள். இதில் நாற்பதுக்குமதிகமானவர்கள் கலந்து கொண்டமை பெருமகிழ்ச்சியை எமக்களித்தது. அத்தோடு அவர்கள் தமக்கிருந்த பல கேள்விகளையும் கேட்டு அதற்கான விளக்கத்தையும் பெற்றுக்கொண்டார்கள்.
Post a Comment