கைத்தொழில் கட்டடத் திறப்பு விழா
திருகோணமலை - உப்பு வெளி கிராமத்தில் கைத் தொழிலுக்கான புதிய கட்டடம் ஒன்று 1-10-2013 ஜெய்கா நிதி உதவி மூலம் சேவா லங்கா அனுசரனையுடன் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. சேவா லங்கா நிறுவனத்தின் கைத்தொழில் பயிற்சி நெறிகளை முடித்த 40 மாணவர்களுக்காகவே இக்கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
இவ்விழாவை ஜெயன்த பண்டார தலைமை தாங்கி நடத்தினார். இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி, மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அல்ஹாபிஸ் நசீர் அஹமட் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக அமைச்சின் செயளாலர் மு. பத்மனாதன், பிரதம செயளாலர் சரத் அபே குணவரத்ன, ஜப்பான் நாட்டின் இலங்கை பிரதி நிதி இறோட்டோ தாணக்கே மற்றும் கைத்தொழில் மாகாண பணிப்பாளர் தென்னக்கோன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இக்கைத்தொழில் பேட்டைக்கான பயிற்சி ஆசிரியாராக முகம்மட் ஹுசைன் லபீப் கடைமையாற்றுகின்றார்.
Post a Comment