Header Ads



கல்வித்தாயின் கருவறை நோக்கிய எங்கள் பயணம்..!

(கத்தாரிலிருந்து தாஸீம்)

மாணவர்களின் ஒழுக்கம், கல்வி மற்றும் கலாச்சார விழுமியங்களை முன்னெடுத்து திறன்பட செய்ய ஓர் உன்னதமான வழிகாட்டியாய் அமையப் பெறுவது பாடசாலைகள் என்பது எல்லோரும் அறிந்த வெளிப்படையான உண்மை. இருந்தபோதிலும் இக்கால கட்டத்தில் இப்பாடசாலைகளின் செயற்பாடு எந்;த வகையில் எம் சமூகக் கல்வி மேம்பாட்டிற்கு உறுதுணையாகவூள்ளது என்பதை அண்மைக்காலங்களில் அடிக்கடி இடம்பெறுகின்ற சில சகிக்க முடியாத சம்பவங்கள் உணர்த்துகின்றன.

ஒரு பாடசாலை என்பது தாயின் கருவறையைப் போன்று சுத்தமானதும் பாதுகாப்பானதுமாகும். ஆனால் அந்தக் கருவறைக்கே பல சோதனைகள் வரும்போது ஒழுக்கமான கல்வியில் வளர்ச்சி கண்ட பிள்ளைகளைப் பெற்றெடுப்பது எவ்வாறு? இதனை வலுப்படுத்தும் முகமாக இக்காலகட்டத்தில் இடம்பெற்றுவரும் மிலேச்சத்தனமான பாடசாலை தாக்குதல்கள்.

இதன் உண்மையான சுயரூபம் என்ன என்று ஆராய்வதை விட இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கு ஒவ்வொரு மாணவனும் மற்றும் பெற்றௌர்களும் பழைய மாணவர்களும் செய்யவூண்டிய கடப்பாடு என்ன என்பதை புரிந்துகொள்ளுதல் காலத்திற்கு ஏற்ற ஓர் விடயம் என நினைக்கிறேன். இதன் விளைவூகள் எம் சமூகத்தை எங்கே கொண்டு செல்லப்போகிறது என்ற ஓர் ஐயப்பாடும் எம் உள்ளத்தை ஆடகொண்டுள்ளதை யாராலும் மறைக்க முடியாது.

தனிமனித தலையீடுகளும் சமூகத்தின் மீது எந்தவொரு அக்கரையூமற்ற சில அரைவேக்காடுகளால்தான் இவ்வாறான அருவருக்கத்தக்க செயல்கள் மேற்கொள்ளப்பட்டு அதன் விளைவூகள் சர்வதேச மற்றும் தேசிய ரீதியாக எமது மாணவ சமூகத்தின் கல்விச் செயற்பாடுகளுக்கு பங்கம் விளைவிப்பனவாக இருப்பதை தற்போது அனுபவ ரீதியாக நாம் உணர்ந்து கொண்டிருக்கின்றௌம். வன்முறையை உடைத்தெறியூம் களமாக அமையூம் பாடசாலைகளிலே வன்முறைகள் இடம்பெறுமாயின் எமது மாணவர்களின் உளவியலில் என்ன மாற்றம் ஏற்படும் என்பதை நாம் சற்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். குறிப்பாக இது வயது வந்த மாணவர்களிடம் பாரியதோர் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. தனக்கு கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர்களே இவ்வாறு கட்டிப் புரளும்போது எந்த வகையில் மற்ற ஆசிரியர்கள் அறிவூரைகள் வழங்குவது?

எம் மாணவர்களின் கல்வியில் மனம் திறந்து ஒவ்வொரு ஆசரியரும் செயற்படுவார்களாயில் துவேசக் கருத்துக்களை விதைக்க எந்தவொரு தீயூ சக்திகளாலும் முடியாது என்பது திண்ணம். எனவே எமக்கு கற்பித்த ஆசரியர்களை நாம்; மதிக்கின்ற இவ்வேளையில் அவ் ஆசிரியர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு மதிப்பளித்து அவர்களின் சுய கௌரவத்திற்குப் பங்கம் வராமல் எமது செயற்பாடுகளை அமைத்துக்கொள்வதில் மாணவர்கள் திறன்பட செயற்படவேண்டிய தருணம் இதுவாகும். எனவே இத்தருணத்தில் மாணவர்கள் அனைவரும் தமது ஒற்றுமையையூம் பலத்தையூம் சாத்வீகமான முறையில் வெளிப்படுத்தி பாடசாலைகள் சண்டைக்களங்களாக மாறுவதில் நின்றும் பாதுகாக்க வேண்டும் என்ற வேண்டுகோளோடும் துஆக்களோடும் மீண்டுமொரு கட்டுரையில் உங்களை சந்திக்கின்றேன்.   

No comments

Powered by Blogger.