Header Ads



ஹில்கன்றி சர்வதேசப் பாடசாலையின் வருடாந்தப் பரிசளிப்பு, ஆசிரியர் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு


(மொஹொமட் ஆஸிக் + ஜே.எம்.ஹாபீஸ்)

இலங்கைக்குத் தேவைப் படுவது நிலையானதும் சமநிலைத் தன்மை கொண்டதுமான தொடா அபிவிருத்தியாகுமென மத்திய மாகாண சபைய ஆளும்கட்சி பிரதம கொறடா சட்டத்தரணி அனுராதா லங்கா ஜயரட்ன தெரிவித்தார்.

கண்டி மடவலை மதினா மத்திய கல்லூரி (31.10.2013 மாலை) மண்டபத்தில் இடம் பெற்ற ஹில்கன்றி சர்வதேசப் பாடசாலையின் வருடாந்தப் பரிசளிப்பு மற்றும் ஆசிரியர் டிப்லோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு என்பவற்றில்பிரதம அதிதயாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் இவ்வாரும் தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்ஷ அவர்களது ஆட்சியின் ஆரம்பத்துடன்  இலங்கையில் சமூகங்களுக்கிடையிலான அமைதி நிலை ஏற்பட ஆரம்பித்தது. அதன் முககிய கட்டமாக நாட்டின் அமைதியும் அபிவிருத்தியும் படிப்படியாக முன் எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. எமக்குத் தேவை காத்திரமான அமைதியும் அபிவிருத்தியுமாகும். அது வெகு விரைவில் உதயமாகும் எனத்தெரிவித்தார்.
ஹில் கன்றி சர்வதேசப் பாடசாலை குறுகிய காலத்தில் வளர்ச்சி யடைந்துள்ளது மட்டுமல்ல சாதி இன மத பேதங்களுக்கு அப்பால் சர்வ குழுக்களையும் ஒன்றிணைத்து சகல மாணவர்களும் கல்வி பயிலும் நிலை பாராட்டத்தக்கது என்றார்.


No comments

Powered by Blogger.