Header Ads



மாளிகைக்காடு ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவரின் மறுப்பு

(இப்னு செய்யத்)

'மாநகர முதல்வர் விவகாரம் ஹக்கீமுடன் கலந்துரையாடல்' என்ற தலைப்பில் தேசிய பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியில். கல்முனை மாநகர முதல்வர் விவகாரம் பற்றி முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கிமுடன் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனீபா தலைமையில் நம்பிக்கையாளர் சபையினர் கலந்துரையாடலில் ஈடுபட இருப்பதாகவும், அது வெற்றியளிக்காத பட்சத்தில் பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் வெடிக்கலாமென்று அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர் என்று தெரிவிக்கும் செய்தி தவறானதென்றும், நான் அவ்வாறு கருத்துத் தெரிவிக்கவில்லை என்றும் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.

இது பற்றி குறித்த பத்திரிகைக்கு அவர் அனுப்பி வைத்த கடித்தினை வாசகர்களின் கவனத்திற்காக தருகின்றோம்.



No comments

Powered by Blogger.