Header Ads



காபிர்களான காதியானிகள் குர்பான் கொடுப்பதற்கு தடைவிதித்த பொலிஸார்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஏராளமான அகமதிய (காதியானிகள்) இனத்தை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். இவர்கள் இஸ்லாம் மதத்தின் வழிபாடுகளையும், சடங்குகளையும் பின்பற்றி வருகின்றனர். எனவே தாங்களும் முஸ்லிம்கள் என தெரிவித்து வருகின்றனர். ஆனால், கடந்த 1974ம் ஆண்டு முஸ்லிம் மத தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக நடந்த வழக்கில், அகமதியர்கள் முஸ்லிம்கள் அல்ல என்று பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அகமதியர்கள் முஸ்லிம்கள் அல்ல என்று பாகிஸ்தான் அரசு சட்டம் இயற்றியது.

இந்நிலையில் பஞ்சாப், லாகூர் மற்றும் அதை சுற்றியுள்ள முஸ்லிம் தலைவர்கள் போலீசில் அளித்த புகாரில், அகமதியர்கள் ஹஜ் திருநாளன்று பள்ளிவாசல்களில் விலங்குகளை பலியிட தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இதையடுத்து போலீசாரும் அங்கு அகமதியர்கள் விலங்குகளை பலியிட தடை விதித்தனர். 

இதுகுறித்து அகமதிய ஜமாத் செய்தி தொடர்பாளர் அமீர் முகமது கூறுகையில், லாகூர் பகுதியில் அகமதியர்கள் விலங்குகளை பலியிட கூடாது என அறிவித்துள்ளனர். அதே போல் உள்ளுர் பள்ளிவாசல்களிலும் அனுமதிக்கவில்லை என்றார். 

No comments

Powered by Blogger.