தொழிலாளி இல்லாது இயங்கும் ஹோட்டல் - ஜப்பானில் ஆச்சரியம்
உலக அளவில் தற்போது உருவாகியுள்ள நவீன தொழில்நுட்ப புரட்சியால் பல துறைகளில் ஆச்சரியம் அடையத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்த வகையில் ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரில் ஒரு நவீன யுக்தியை புகுத்துகிறார்கள். அதாவது தொழிலாளி இல்லாது இயங்கும் ஹோட்டல் தான் அது. எப்படி இயங்க வைக்கிறார்கள் என்பதே வியப்பை தருகிறது.
அனைத்து மேஜைகளிலும் தொடுதிரை கம்ப்யூட்டர் இருக்கும். வாடிக்கையாளர் அதில் கையால் அழுத்தி தாங்கள் விரும்பும் உணவுக்கு ஆர்டர் கொடுக்க வேண்டும். உடனே இது சமையல் கூடத்தில் இருக்கும் கம்ப்யூட்டருக்கு சென்று விடும்.
அங்கு உணவு தயாராகி கன்வேயர் பெல்ட் மூலம் சாப்பாடு மேஜைக்கு வந்துவிடும். சாப்பிட்டு முடிந்ததும் காலித்தட்டுகள் சாய்வுதளம் மூலம் சுத்தம் செய்கிற இடத்திற்கு சென்று விடும். தட்டு எண்ணிக்கையை கணக்கிட்டு பில் வழங்கப்படும். இது முழுக்க முழுக்க சர்வர்கள் இன்றி செயல்படும் “தானியங்கி உணவகம்” ஆகும். tn
மனிதர்கள் இல்லாத அரசாங்கம் நடத்த ஒன்றை கண்டுபிடிங்கப்பா ஊழல் இல்லாத ஆட்சி உலகத்தில் நடக்கும்
ReplyDelete