ஊடகவியலாளர்களுக்கு பெண்கள் உரிமைகள் தொடர்பாக எடுத்துரைப்பு
(யு.எம்.இஸ்ஹாக் + ரீ.கே.றஹ்மத்துல்லா)
அம்பாறை மாவட்ட தமிழ் மொழி மூலமான ஊடகவியலாளர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் உரிமைகள் 1325 ஆவது பிரேரனையை நடைமுறைப்படுத்தல் தொடர்பான விளக்கமளிக்கும் செயலமர்வினை முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி மேற்கொண்டு வருகின்றது.
இதற்கமைய ஊடகவியலாளர்களுக்கான இரண்டாம் கட்ட செயலமர்வு அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய கூட்டமண்டபத்தில் சனிக்கிழமை (05) இடம் பெற்றது. அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியானது போகஸ் எனும் சர்வதேச அரசசார்பற்ற அமைப்பின் அனுசரணையடன் பெண்கள் தொடர்பான பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது. முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எஸ்.ஜலீல் தணைலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வளவாளராக சுலைமாலெப்பை அப்துல் அஸீஸ் கலந்து கொண்டார்.
இதன்போது யுத்தம் மற்றும் அனர்த்தங்களின் பின்னர் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுவார்கள் தொடர்பான கலந்துரையாடலும், பெண்கள் தற்காலத்தில் எதிர் நோக்கிவரும் முக்கிய சவால்கள், பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. மேலும் பெண்கள் உரிமைகள் தொடர்பான ஊடகவியலாளர்களின் பங்கு, மக்கள் மத்தியில் விழிப்பனர்வு ஏற்படுத்துவதற்கான அவசியம், அதனை கொண்டு செல்வதற்கான உபாயங்கள் போன்றன பற்றியும் ஏடுத்துரைக்கபட்டது.
Post a Comment