சம்மாந்துறை பிரதேச சபை வீதிகளை அபிவிருத்தி செய்யும் பணிகள்
(யு.எல்.எம். றியாஸ் + பர்ஹான்)
சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வீதிகள் கொன்க்ரீட் வீதிகளாக அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் புற நெகும வேலைத்திட்டத்தின் கீழ் இவ் அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளபபடுகின்றன இதற்கமைய சம்மாந்துறை மல் 14ம் வீதி சுமார் 13.2 மில்லியன் ரூபாய் செலவில் கொன்க்ரீட் வீதியாக அபிவிருத்தி செய்யும் வைபவம் பிரதேச சபை செயலாலர் ஏ.ஏ. சலீம் தலைமையில் இடம்பெற்றது (04.10.2013)
இவ்வைபவத்தில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்,.எம். நௌசாத் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வின் போது சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்,.எம். நௌசாத் சம்மாந்துறை பிரதேசத்தில் மேற்கொண்டுவரும் அபிவிருத்திப் பணிகளுக்காக
பிரதேச மக்களினால் பொன்னாடை போத்தி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் பிரதேச சபையின் உதவித்தவிசாளர் ஏ ,கலீளுள் ரஹ்மான்,சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்கள்,மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் திட்டப் பணிப்பாளர் கே.எல்.ஹம்சா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment