இராணுவ சதிப்புரட்சியை அறிந்ததும் தொழுது, பிரார்த்தனையில் ஈடுபட்ட மொஹமட் முர்சி
இராணுவ சதிப்புரட்சி குறித்து தெரியவந்தபோது பதவி கவிழ்க்கப்பட்ட எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சி ஆரம்பத்தில் அதிர்ச்சி அடைந்ததாக முன்னாள் ஜனாதிபதியின் உதவியாளர் ஒருவர் அனடொலு செய்திச் சேவைக்கு விபரித்துள்ளார்.
‘தேசிய தொலைக்காட்சியில் இராணுவ சதிப்புரட்சி குறித்த அறிவிப்பு வாசிக்கப்படும் போது ஜனாதிபதியின் பல ஆலோசகர்கள் மற்றும் உதவியாளர்களுடன் அமர்ந்திருந்தேன்’ என்று முர்சியின் ஊடக ஆலோசகராக இருந்த அஹமத் அப்தல் அkஸ் குறிப்பிட்டார். ‘இவ்வாறான முன்னெடுப்பு பற்றி ஜனாதிபதியோ அவரது ஆலோசகர்களோ எதிர்பார்த்திருக்கவில்லை’ என்றும் அவர் கூறினார்.
கடந்த ஜுலை 3 ஆம் திகதி ஜனநாயக முறையில் தேர்வான ஜனாதிபதி முர்சியை இராணுவம் பதவி கவிழ்த்தது. இதன்போது ஜனாதிபதி பதவி கவிழ்க்கப்பட்ட அறிவிப்பு அந்நாட்டு தொலைக் காட்சியில் பல்வேறு அரசியல் பிரதிநிதிகள், அல் அஸ்ஹர் தலைமை இமாம் அஹ்மத் அல் தய்யிப் மற்றும் கொப்டிக் பாப்பரசர் இரண்டாவது டவட்ரோஸ் ஆகியோரின் முன்னிலையில் இராணுவத் தளபதி அல்தல் பத்தாஹ் சிசி வாசித்தார்.
தொலைக்காட்சி அறிவிப்பு வெளியானதும் முர்சியின் ஆலோசகர்கள் உடனடியாக ஜனாதிபதியை சந்திக்க அவரது அலுவல கத்திற்கு சென்றதாக அப்தல் அஸிஸ் குறிப்பிட்டார். ‘நாம் அனைவரும் ஒன்றி ணைந்து தொழுது பிரார்த்தனையில் ஈடுபட் டோம். பின்னர் ஜனாதிபதி தம்முடன் ஒரு சிலரை இருக்கும்படி கூறிவிட்டு ஏனையோரை வெளியே றுமாறு அறிவுறுத்தினார்’ என்று அன்றைய நிகழ்வை நினைவுகூருகிறார் அஸிஸ். இதன்போது முர்சி கையடக்க தொலைபேசியில் தனது கடைசி அறிவிப்பை பதிவு செய்தார். அதில் அவர் தாமே எகிப்தின் அதிகார பூர்வ ஜனாதிபதி என்றும் தம்மீதான இராணுவ சதிப்புரட்சியை நிராகரிப்பதாகவும் அது ஏற்க முடியாதது என்றும் அறிவித்தார். Tn
Post a Comment