Header Ads



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் வடகிழக்கை மீளிணைக்கும் சதித்திட்டத்தை ஆரம்பித்துள்ளன

(vi) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து வடக்கையும் கிழக்கையும் மீள இணைக்கும் சதித்திட்டத்தை ஆரம்பித்துள்ளன. அதன் வெளிப்பாடே வடக்கு, கிழக்கை அரசு இணைக்க வேண்டுமென்ற விக்னேஸ்வரனின் கருத்தாகும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.

அரசாங்கம் இதற்கு உடன்படாவிட்டால் சர்வதேசத்தின் உதவியுடன் இது நிறைவேற்றப்படுவது நிச்சயம் என்றும் அவர் கூறினார். இது தொடர்பாக டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டுமென்பது கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸ{ம் சேர்ந்து ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாடாகும்.

இதற்கமைய வடக்கிலும் கிழக்கிலும் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் அதிகளவில் வாழ்வதாகவும் எனவே, இரு தரப்பும் ஒரு மொழி பேசும் சமூகப் பிரிவுகளாகும்.  எனவே, இரண்டு மாகாணமும் இணைக்கப்பட வேண்டியது அவசியமாகும் என வலியுறுத்தி மிக விரைவில் கூட்டமைப்பு வட மாகாண சபையின் பிரேரணையொன்றை கொண்டு வந்து நிறைவேற்றிக் கொள்ளும்.

அதன் பின்னர் நிறைவேற்றப்பட்ட பிரேரணை பாராளுமன்றத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படும். ஆனால், வடக்கு, கிழக்கு இணைப்புக்கு பாராளுமன்றம் அனுமதி வழங்காது. அதனை எதிர்க்கும்.

இதன் பின்னர் கிழக்கு மாகாண சபையிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதேபோன்று பிரேரணையொன்றை நிறைவேற்றும். அதற்கு பாராளுமன்றம் அனுமதி வழங்காது. இவ்வாறானதொரு நிலையில் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸ{ம் இணைந்து வடக்கு - கிழக்கு தமிழ்ப்பேசும் மக்களின் ஆணையை இலங்கை பாராளுமன்றம் மதிக்கவில்லை.

அதனை நிராகரித்து விட்டது என்ற பிரசாரத்தை சர்வதேச ரீதியில் முன்னெடுக்கும். இதன்போது சர்வதேசம் எமது பிரச்சினையில் நேரடியாக தலையிடும். வடக்கையும் கிழக்கையும் மீள இணைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும். இது தான் எதிர்காலத்தில் நடக்கப் போகின்றது.

No comments

Powered by Blogger.