மூதூர் பிரதேச சபையினால் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் பூங்கா
(மூதூர் முறாசில்)
'தயட்ட கிருல' வேலைத்திட்டத்தின் கீழ் மூதூர் பிரதேச சபையினால் நிர்மாணிக்கப்பட்ட ஹரீஸ் சிறுவர் பூங்கா கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத்தினால் இன்று ஞாயிற்றுக் கிழமை திறந்து வைக்கப்பட்டது.
பிரதேச சபை தவிசாளர்; ஏ.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழா வைபவத்தில்; திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், உதவி தவிசாளர் எம்.எச்.ஹாஜா முகைதீன் பிரதேச சபை உறுப்பினர்களான ஜவாப்தீன் ஜஸ்ரி,பி.ரி.ஆப்தீன், பி.ரி.எம்.பைசர், ஏ.ஜி.நஸ்மி, ரி.தமிழ்ச் செல்வன், வி.மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது சிறுவர் பூங்கா திறந்து வைக்கப்பட்டதோடு புலமைப் பரிசில் பரீட்சையில் பிரதேசத்தில் கூடுதலான புள்ளிகளைப் பெற்ற மானவர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
Post a Comment