Header Ads



பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா ஆடிய நாடகமே எனது கைது - புவி ரஹ்மத்துல்லாஹ் சீற்றம்


பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவும், அவரது ஆதரவாளர்களும் ஆடிய நாடகத்தின் வெளிப்பாடே தனது கைது ஆகுமென வாரஉரைகல்லின் ஆசிரியர் புவி ரஹ்மத்துல்லாஹ் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் சர்வதிகார போக்கு, பித்தலாட்டம் உள்ளிட்ட அருவருப்பான செயற்பாடுகளுக்கு எதிராக நான் பகிரங்கமாக குரல்கொடுத்தேன். அவருடைய மகனுடைய அசிங்ககரமான செயற்பாடுகளையும் அம்பலப்படுத்தினேன். இதனால் சீற்றமடைந்த ஹிஸ்புல்லா அராஜக செயற்பாடுகளை முன்னெடுத்து என்னை கைதுசெய்யச் சொல்லி பொலிஸாரை ஏவிவிட்டுள்ளார்.

அதன்வெளிப்பாடுதான் எனது வீட்டிலிருந்து மீட்கப்பட்ட கஞ்சா சுருள் நாடகமாகும். இதன் போலியான சம்பவங்கள் குறித்து நான் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளேன். எனது ஊடகச் செயற்பாடுகள் தொடரும். இதை ஹிஸ்புல்லாஹ் தனது அரசியல் அதிகாரம் மூலம் தடுத்துவிட முடியாது எனவும் புவி ரஹ்மத்துல்லா அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டார்.

5 comments:

  1. புவி ரஹ்மாதுள்ளஹ்வின் தைரியத்திற்கு பாராட்டுக்கள். பிரதியமைச்சர் தனது தலையில் தானே மண்ணை அள்ளிக் கொட்டிக் கொள்கின்றார்.

    தனது மகனை கண்டித்து நேர்வழிப் படுத்துவதனை விடுத்து, அடுத்தவரை கைது செய்ய சதித் திட்டம் தீட்டுவது, பூமராங் ஆக தனக்கே திரும்பி வரும் என்பதனை ஹிஸ்புல்லாஹ் அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். aakave avar தனது மகனை ஒழுங்காக வளர்த்து இருக்க வேண்டும்.


    ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பரம்பரைப் பணக்காரன் அல்ல. காத்தான்குடி மக்களின் வாக்குகளினால் தான் அவர் அரசியல் வாதியாகி, பிரதியமைச்சர் ஆகி, இன்றுள்ள நிலைக்கு வந்துள்ளார். அவரது தனிப்பட்ட வளர்ச்சி என்பது, முக்கியமாக காத்தான்குடி முஸ்லிம் மக்களின் முழுமையான தயவில் உருவான ஒரு விடயம்.


    ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தனது மகனை வெளிநாட்டுப் பல்கலைக் கழகத்தில் கற்பிக்க அனுப்பும் அளவிற்கு ஆற்றலைப் பெற்றுக் கொண்டிருப்பதற்கு முழுக் காரணமும் காத்தான்குடி மக்கள் அவருக்கு வழங்கிய ஆதரவும், வாக்குகளும் ஆகும்.

    அந்த வகையில், ஹிஸ்புல்லாஹ்வின் மகனது கேள்விக்குரிய, இஸ்லாத்திற்கு முற்றிலும் முரணான நடத்தை குறித்து கேள்வி கேட்கவும், அதனை கண்டிக்கவும் காத்தான்குடி மக்களுக்கு பூரண உரிமை இருக்கின்றது என்கின்ற அடிப்படையை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  2. இத எத்தனயோ சினிமால பாத்துடோம்.
    வேற என்ன சரி ஐடியா ஒன்று வைதுறுப்பார்

    ReplyDelete
  3. என்ன ஹிஸ்புல்லா சார் அவர்களே... நீங்களும் 'தட்டிக்கேட்க' மாட்டீர்கள். ... 'தட்டிக்கேட்பவர்களையும்' விட்டு வைக்க மாட்டீர்கள். உங்களைப்பொருத்தவரையில் 'ஆளும் கட்சி' மட்டும் தான் இருக்க வேண்டும். 'எதிர்க்கட்சி' இருக்கக் கூடாதா? அதனால் தான் என்னவோ உங்களின் 'பதவியை' தொடர்ந்தும் பாதுகாத்துக்கொள்ள முடிகிறது. ஆனால் உங்களை பதவியில் அமர்த்தியவர்களையும் அவர்களின் உரிமைகளையும் மறந்து வருகிறீர்கள்.?

    ReplyDelete
  4. என்ன ஹிஸ்புல்லா சார் அவர்களே... நீங்களும் 'தட்டிக்கேட்க' மாட்டீர்கள். ... 'தட்டிக்கேட்பவர்களையும்' விட்டு வைக்க மாட்டீர்கள். உங்களைப்பொருத்தவரையில் 'ஆளும் கட்சி' மட்டும் தான் இருக்க வேண்டும். 'எதிர்க்கட்சி' இருக்கக் கூடாதா? அதனால் தான் என்னவோ உங்களின் 'பதவியை' தொடர்ந்தும் பாதுகாத்துக்கொள்ள முடிகிறது. ஆனால் உங்களை பதவியில் அமர்த்தியவர்களையும் அவர்களின் உரிமைகளையும் மறந்து வருகிறீர்கள்.?

    ReplyDelete
  5. இவ்வளவு மலிவான தந்திரம் செய்து பெயர் எடுக்க ஹிஸ்புல்லாஹ் என்ன சின்ன பிள்ளையா? நரி அஸ்ரப் அவர்களையே ஆட்டிப்படைத்த நரி அந்த நரி புவிக்கி இந்தளவு சீப்பா மருந்துகட்டும் என்று யாராவது நினைபார்கள் எனில் அது அவர்களின் அறிவின் இலட்சனம் இது ஏதோ போலிஸ் புவி ஊடலும் கூடலும் காதான்ட்குயில் மட்டுமல்ல நம் முஸ்லிம்களில் அதிகம் பேறுக்கு கஞ்சா ஒரு பூஞ்செடி கசக்கி ஒரு தம் அடி? ஒருகோடிக்கிமேல் கஞ்சா பிஸ்னஸ் தினமும் மட்டகளப்பில் நடக்குதாம் 4550 மேல் முஸ்லிம் நபர்களின் மோட்டார் சைகில்கள் சாராய கடைகளில் தினமும் தரிக்கிறதாம் இது மட்டகளப்பு நிலவரமாம்

    ReplyDelete

Powered by Blogger.