மூத்த ஊடகவியலாளர் எப்.எம்.பைருஸ் விருது பெற்றார்
(அஷ்ரப் ஏ சமத்)
சுகாதார ஊடகத்துறையை முன்னேற்றுவதற்கு இலங்கை மருத்துவ சங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அச்சு ஊடகங்களில் சிறந்த ஆக்கங்களை படைத்த ஊடகவியலார்களுக்கு மருத்துவ சங்கம் சிறந்த ஆக்கங்களை படைத்த ஊடகவியாளர்களுக்கு மருத்துவ சங்கம் திறன் விருதுகளையும் வழங்கி வருகின்றது. இச் சங்கம் 1887ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
இவ்வாண்டுக்கான சிறந்த தமிழ் ஆக்கத்திற்கான திறன் விருதை சிரேஷ;ட ஊடகவியளாளர் கலாபூஷணம். எப்.எம்.பைருஸ், பெற்றுள்ளார், சிறுநீரக கற்கள் தொடர்பாக இவர் எழுதிய ஆக்கம் புத்திஜீவிகள் குழுவினால் சிறந்த சுகாதார துறை திறன் விருதுக்கு தெரிபு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியக் கலாநிதி பி.ஜே.பி. பெரேரா, மருத்துவ சங்கத்தின் ஊடகத் தலைவர் வைத்திய கலாநிதி ருவைஸ் ஹணிபாவும் இணைந்து இவ் விருதுகளை வழங்கி வைத்தனர்.
இதன்போது ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் சிறந்த ஆக்கங்களை வழங்கிய ரண்திம ஆட்டிக்கல, அசந்த எதிரிருசுரிய ஆகியோருக்கும் திறன் விருதுகள் வழங்கப்பட்டன.
Post a Comment