அந்த அகதிகளுக்காய்..!
(முனையூர் ஏ ஸமட்)
இருநூற்றி எழுபத்தாறு
மாதங்களுக்குப் பின்னால்
புரட்டப்படும் நூலினிலே
கண்ணீரால் கழுவப்பட்ட
கதைகள் ஏராலம்....
அதில்....
துப்பாக்கி
ராஜாக்களின்
'கண்' களிலிருந்து பறந்த
உயிர் கொல்லிகளின்
கோரப் பிடியினில்
தலைகள் உருண்டிடாமலே
இதய வலியோடு
ஓடிப்போய் வாழும்
அந்த அகதி வாழ்வு
நாட்களின்
அனுபவங்கள்
சுடர் விட்டெரிந்த
போர் தீயின்
அனலில் கருகாமலே
களிமண் குடிசையையும்
செங்கல் வீட்டையும்
கருங்கல் கோபுரங்களையும்
ஏன்
வாழ்வாதாரங்களையும்
வாயில்லா ஜீவன்களையும்
விட்டோடி வாழும்
வாழ்க்கையின்
நினைவுகள்
மலர்ந்த பொழுது
சூட்டிய நாமத்தோடு
இன்னுமொரு நாமம் ஏற்றி
தவழ்ந்த மண்ணையும்
விதைத்த நிலத்தையும்
விட்டகன்ற
வாழ்வுச் சோக நாட்களின்
ஞாபகங்கள்;
இப்படி
இதயத்தை விட்டகழாத
வாழ்வின் சோதனைகள்;
அத்தனையையும்
இத்தனை
இருபத்து மூன்று வருடங்களாய்
சுமந்து வாழும்
நம்
சகோதர நெஞ்சங்களுக்காய்...
அந்ந அகதிகளின்
எதிர்கால வாழ்வுக்காய்.....
என்ன செய்தோம்
எது செய்கிறோம்.
இன்று வரை........ நாம்......
Post a Comment