Header Ads



கல்முனைக்குடி வீதியை புனர்நிர்மாணம் செய்து தாருங்கள் - உதுமாவெப்பையிடம் வேண்டுகோள்


(எம்.எம்.ஏ.ஸமட்)

கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட கல்முனைக்குடி மத்திய வீதியை புனர்நிர்மாணம் செய்து தருமாறு கல்முனைக்குடி மத்திய வீதி குடியிருப்பாளர்கள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாவெப்பையிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

கல்முனைக்குடிப் பிரதேசத்தின் சில வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்ற போதிலும் பல வீதிகள் இன்னும் அபிவிருத்தியின் வாசத்தை நுகராமலே உள்ளன.  தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ளது. கல்முனைக்குடியின் பல வீதிகள் குண்டும் குழியுமாக காணப்படுவதும் அவற்றில் மழை நீர்  தேங்கிக் காணப்படுகிறது.

கல்முனைக்குடியின் முக்கிய வீதிகளில் மத்திய வீதி அதி முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வீதியினூடாக குறிப்பாக கல்முனைக்குடியின் நான்கு பாடசாலைகளுக்கும் செல்லும் மாணவர்கள் இவ்வீதியையே பயன்படுத்துகின்றனர். தற்போது பருவ மழை தொடங்கியுள்ளதனால் மழை வெள்ளம் நிறைந்து காணப்படும் இவ்வீதியால் பாதசாரிகளும் வானங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலைமைகளைக் கருத்திற்கொண்டு மிக அவசரமாக இவ்வீதியைப் அபிவிருத்தி செய்து தருமாறு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையிடம் கல்முனைக்குடி மத்திய வீதி குடியிருப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.