நிந்தவூரில் விதைப்பு வேலைகளில் விவசாயிகள் மும்முரம்
(Umar ali Mohamed Ismail)
நிந்தவூர் கமநல சேவை பிராந்தியத்திற்குட்பட்ட விவசாயக்கண்டங்களில் இவ்வருட பெரும்போகத்திற்கான நெல்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று 31 10 2013 ஆம் திகதி வியாழக்கிழமை சம்மாந்துறையில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் திரு அல்விஸ் அவர்களது தலைமையில் நடைபெற்ற பெரும்போக நெல்செய்கைக்கான ஆரம்பக்கூட்டத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் சகல கண்டங்களிலும் விதைப்பு நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும் என்று தீர்மநிகப்பட்டதாக நிந்தவூர் கமநல சேவை மத்திய நிலைய பொறுப்பாளரும் பெரும்பாக அபிவிருத்தி உத்தியோகத்தருமான ஜனாப் ஆதில் ஹார்லிக் தெரிவித்தார்.
இம்முறை நேரகாலத்துடன் பருவ மழை ஆரம்பித்துள்ளதால் சில கண்டங்களில் ஏற்கனவே விதைப்பு நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.சில இடங்களில் சேற்று விதைப்பும்,பல இடங்களில் மறுத்தல் முறையும் மேற்கொள்ளப்படுகின்றது.
இம்முறை சேற்றுவிதைப்பு மிகவும் குறைவான இடங்களிலேயே நடைபெறுவதால் பலகையடித்தல் மூலம் சம்பாதிக்கும் மாட்டுவண்டியுரிமையளர்கள் குறிப்பிட்ட தொழில் வாய்ப்புக்கிடைக்காமல் ஏமாற்றமடைந்து காணப்படுகின்றனர்.
Post a Comment