Header Ads



யூதர்கள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய நோபல் பரிசு

இஸ்ரேல் அரசு, அந்நாட்டிலுள்ள யூதர்களின் அமைப்பு மற்றும் ஜெனிசிஸ் தொண்டு நிறுவனம் மூன்றும் இணைந்து யூதர்களின் நோபல் பரிசு என்றழைக்கப்படும் பரிசு ஒன்றினை ஆண்டுதோறும் வழங்க உள்ளன. இந்தப் பரிசினைப் பெறும் நபர் தங்களது தொழில்முறையில் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றிருக்கவேண்டும். அதுமட்டுமின்றி யூத மக்களுடனோ அல்லது இஸ்ரேலுடனோ தொடர்புடையவராக இளைய தலைமுறைக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்பவராகவும் இருக்கவேண்டும்.

இந்த ஆண்டிற்கான யூதர்களின் நோபல் பரிசினைப் பெறுபவராக நியூயார்க் மேயரான மைக்கேல் புளூம்பெர்க் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மனித நேயம் மற்றும் பொது சேவையின் நீண்ட கால சாதனையாக அவருக்கு இந்தப் பரிசு வழங்கப்படுவதாக ஜெனிசிஸ் அறக்கட்டளை இன்று தெரிவித்தது. 200 போட்டியாளர்களின் மத்தியில் புளூம்பெர்க் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ அடுத்த வருடத் துவக்கத்தில் இந்தப் பரிசினை அவருக்கு வழங்குவார். அதன்பின்னர் புளூம்பெர்க் இந்தப் பணத்தை எந்த மனித நேய காரணத்திற்கு நன்கொடை அளிக்க விரும்புகிறார் என்பது தெரிவிக்கப்படும். 

நியூயார்க்கின் மேயராக தனது மூன்றாவது மற்றும் இறுதி ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்ய உள்ள புளூம்பெர்க் இந்தப் பரிசினைப் பெறும் முதல் தேர்வாளராகத் தான் இருப்பது குறித்து மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் தனது பெற்றோர்கள் யூத மதத்தின் மதிப்புகளை தன்னுள் விதித்ததாகவும், தான் அதனை வாழ்நாள் முழுவதும் நிறைவேற்றி வருவதாகவும் புளூம்பெர்க் தெரிவித்தார். தன்னுடைய தொழில், அரசு மற்றும் சமூகப்பணிகள் அனைத்திலும் இந்த நெறிமுறைகள் அவருக்கு வழிகாட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

யூத மதத்தின் மதிப்புகள் மற்றும் ஒழுக்கவியலை பொதுவான ஒரு நூலாகப் பயன்படுத்தி பல நூற்றாண்டுகளாக மனித இனத்தை முன்னோக்கி நகர்த்த உதவிய அடிப்படை பண்புகள் குறித்தே இந்தப் பரிசு வழங்கப்படுவதாக ஜெனிசிஸ் அறக்கட்டளை அமைப்பு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.