Header Ads



கனவு காணும் வாழ்க்கை யாவும்..!

(TM) தான் கண்ட கனவை மூவருடன் இணைந்து நனவாக்க முயன்றவர் உட்பட அந்த மூவரையும் பொலிஸார் கைது செய்த சம்பவம் சிறிபுர நுவரகல எனுமிடத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

விலை மதிப்பற்ற இரத்தினக்கற்கள் கொண்ட புதையல் ஒரு இடத்தில் புதைக்கப்பட்டு இருப்பதாக ஒருவர் கனவு கண்டுள்ளார்.

அந்த கனவினை நனவாக்குவதற்கு இன்னும் மூவரையும் அவர் இணைத்துகொண்டுள்ளார்.

அதன் பிரகாரம் சந்தேகநபர்கள் நால்வரும் சிறிபுர நுவரகல எனுமிடத்தில் புதையலை தோண்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர்.

இதன்போதே, அரலகன்வில பொலிஸார் இந்த நால்வரையும் சந்தேகத்தின் பேரில் நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.

பொலிஸார் இவர்களை கைது செய்யும்போது அவர்கள் சுமார் 30 அடிக்கு மேல் ஆழமான குழியை தோண்டியிருந்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்கள் பொலிஸார் கைது செய்யும் போது அவர்கள்  கிணறு வெட்டுவதாகவே முதலில் தெரிவித்துள்ளனர்.சந்தேகம் கொண்ட பொலிஸார் அவர்களிடம் தொடர்ச்சியாக மேற்கொண்ட விசாரணையின் போதே அவர்கள் புதையல் தோண்டும் விபரம் வெளியானது.

இதனையடுத்து புதையலை எடுப்பதற்காக இவர்கள் பயன்படுத்திய  ஆயுதங்;கள் 3 தண்ணீர் பம்பிகள், மின் விசிறி, ஏணி மற்றும் படையல் பொருட்கள் என்பவற்றை தாம் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.