முஸ்லிம் அரசியல் தலைமைகள் விட்ட தவறுகள் காரணமாக பாரியதொரு தோல்வி
(சத்தார் எம் ஜாவித்)
வினைவிதைத்தவன் வினை அறுப்பான திணை விதைத்தவன் திணை அறுபான் என்பதுபோல் வடமாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்களின் நிலை ஆகிவிட்டது. தமக்குள் இருந்த கர்வங்களும். போட்டிகளும் எக்காலத்திலும் வெற்றியளிக்காது என்பதனையே வடமாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்களுக்கு கிடைத்துள்ள தேர்தல் பிரதி நிதித்தவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
சுமார் 25 வருடங்களுக்குப்பின் பல்வேறுபட்ட சர்ச்சைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் மத்தியில் வடமாகாண சபை தேர்தல் தற்போது ஒருவாறு நடந்து முடிந்துள்ளது. மேற்படித் தேர்தல் நடைபெறுமா? என்ற கேள்விக்குறியுடன் இருந்த வடமாகாண சபைத் தேர்தலானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளின் பல்வேறுபட்ட எதிர்பார்ப்புக்களுடன் நடந்து முடிந்தமையும் கூட வடமாகாண தமிழ் பேசும் மக்களுக்கு கிடைத் மற்றுமொரு வெற்றியாகவே கருதப்படுகின்றது.
இருந்தாலும் முஸ்லிம்களைப் பொருத்வரை அரசியல் தலைமைகள் விட்ட தவறுகள் காரணமாக பாரியதொரு தோல்வியை அடையவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள் காணப்படுகின்றனர். இத்தேர்தல் வெற்றியின் பின்னணியில் போட்டியிட்ட முஸ்லிம் கட்சிகள் மிக மோசமான பின்னடைவை பெற்றுள்ளன. இதற்குக் காரணம் பலவாக இருந்தாலும் அரசுடன் இணைந்த கட்சிகளுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை என்பதனை வடமாகாண சபையில் கண்டு கொள்ள முடிந்துள்ளதாக கல்விமான்கள் தெரிவிக்கின்றனர்.
வன்னி மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் கடந்த காலங்களில் பாராளுமன்றத் தேர்தல்களில் ஆறு ஆசனங்களில் மூன்று அல்லது நான்கு ஆசனங்களை தமதாக்கிக் கொண்டனர் இதவரை காலமும் அதுதான் இருந்து வந்தது ஆனால் தற்பொதைய சமாதான சூழ் நிலை;குப்பின்னர் வடமாகாண சபைத் தேர்தல் மூலம் இனிவரும் காலங்களில் அது இடம் பெறாது என்பதனை வெளிப்படுத்திளுள்ளது.
குறிப்பாக கடந்த இரண்டு வருடகாலமாக இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக தொடர்ச்சியாக பெரும்பான்மை இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களின் தாக்கங்கள் தற்போதைய தேர்தல்களில் வெளிப்படுத்தியுள்ளது.
முஸ்லிம்களின் பல வணக்கஸ் தளங்கள் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டும் , உடைக்கப்பட்டும் ,முஸ்லிம்களின் சமய விழுமியங்களில் நேரடியாக இனவாதிகள் தாக்கங்களை ஏற்படுத்தி கொச்சைப்படுத்திய போதிலும் அரசசோ அல்லது அதனுடன் ஒட்டியுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளோ கணக்கெடுக்காது செயற்பட்டதன் விளைவு ஒட்டு மொத்தத்தில் தேர்தல் மூலம் தமது வெறுப்பைக் காட்டி அவர்களை புறக்கணித்துள்ள நிலைமைகளை தேர்தல் முடிவுகள் புலப்படுத்தியுள்ளது.
இதேவேளை தமிழ் தேசியச் கூட்டமைப்பு முஸ்லிம்களை தம்முடன் இணைத்துள்ளமையும் அதன் வெற்றியின் உச்சத்திற்கு மேலும் ஒருபடியாக அமைந்துள்ளது. இதன் காரணமாக வடமாகாண சபைத் தேர்தலை சிறப்பாக இட்டுச் செல்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்திருக்கும் முஸ்லிம் அமைப்பான நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஒத்துழைப்பு இன நல்லுறவிற்கு சிறப்பாக அமையும் என்பதும் முக்கியமான நல்லதொரு சமிக்கையாகும்.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்தமை கடந்தகால அரசியல் வரலாற்றில் முஸ்லிம் சமகத்திற்கு இந்த அரசினால் எந்தவித பாதுகாப்பும் வழங்கப்படவில்லை முஸ்லிம்களை அவர்கள் மாற்றான்தாய் மனப்பான்மையில் கண்டு கொண்டமை போன்ற விடயங்கள் மேற்படிக் கட்சியானது தமிழ் கூட்டமைப்புடன் இணைந்தாவது தமது சமுகத்திற்கு குரல் கொடுப்போம் என்ற காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
உண்மையில் வடக்கில் இருக்கும் பெரும்பான்மை சமகங்கள் தமிழ் மற்றும் முஸ்லிம்கள்தான் இவர்கள் மொழி ரீதியாக ஒற்றுமைப்பட்டுள்ளதால் சமுக ரீதியாகவும் ஒற்றமையை மேலும் வழுப்பெறச் செய்வதற்கு இரு சமுகங்களும் ஒற்றினைவதானது வடக்கைப் பொருத்தவரையில் முக்கியமானதொரு விடயமாகும்.
இதற்கு தமிழ் தேசியச் கூட்டமைப்பும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஒன்றினைந்தது அனைவராலும் தற்காலத்தில் வரவேற்கத்தக்க ஒரு விடயமாகவே நோக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபைத் தேர்தலில் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு காட்டியுள்ள ஆதரவினை கண்டு இனியாவது முஸ்லிம் கட்சிகளும். முஸ்லிம் அரசியல் வாதிகளும் மக்களின் உணர்வுகளுக்கும், சமய விழுமியங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பதனைக் கற்றுக் கொள்ளவேண்டும்.
முஸ்லிம் அரசியல் தலைமைகள் வடமாகாண சபைத் தேர்தலில் தமது பின்னடைவுக்கு அல்லது தோல்விக்குரிய விடயத்தை ஒரு பாடமாகக் கொண்டு இனிவரும் காலங்களில் செயற்பட வேண்டும் என்பதனை உணர்த்துவதான செய்தியையே காட்டியுள்ளது.
என்னதான் தலைக்குமேல் குதித்தாலும் மக்களின் உணர்வுகள், தேவைகள், அவர்களின் அரவணைப்புக்கள் என்பது அரசியல்வாதிகளுக்கு மிகவும் முக்கியமானதாகும். வாக்காளர்கள் விரும்பும் பட்சத்தில்தான் ஒரு வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெறமுடியும். எல்லாக் காலத்திலும் மக்களை ஏமாற்றலாம் என்று கனவுகானும் அரசியல்வாதிகளுக்கு வடமாகாண சபைத் தேர்தல் முன் உதாரணமாகும்.
தேர்தல் காலங்களில் முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கள் ஒரு போக்குள்ளது அதாவது ஒருவனிடம் பணம் இருந்தால்போதும் அவன் எப்படிப்பட்டவன் என்றாலும் சரி அவனை தேர்தல்களத்தில் இறக்கிவிடுவது வழமையாகிவிட்ட ஒரு செயற்பாடாகும்.
மக்கள் அரவணைக்கும் பிரதிநிதிகளை விட்டுவிட்டு பணம் படைத்தவர்களை தேர்தலில் களமிறக்குவதால் அவனைப் பற்றி எத்தனைபேருக்குத் தெரியும். முகம் தெரியாத ஒரு நபரை களமிறக்கினால் அவர்களுக்கு மக்கள் வாக்குகளை அளிப்பார்களா? இந்த விடயங்கள் எல்லாம் மிகவும் அவதானமாக நோக்கப்படவேண்டும்.
அதுமட்டுமல்லாது அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் தம்மை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாணத்தின் அல்லது பகுதி மக்களுக்கு பாரபட்சமின்றி தமது சேவைகளைச் செய்யவேண்டும், அவர்களின் கருத்துக்களை உள்வாங்க வேண்டும் ஆனால் இவையெல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு இருப்பது சொற்ப வாக்குகள் அதற்குள் தமக்குள் பல கட்சிகளும் பிரிவினைகளும் இவையெல்லாம் தற்போது தவிடுபொடியாகி அரசியல்வாதிகளுக்கு முகத்தில் மக்கள் கரியைப் பூசியுள்ளதை வடமாகாண சபைத் தேர்தல் தற்போது வெளிப்படையாக காட்டியுள்ளது.
வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு மக்களுக்கு பணத்தையா அல்லித் தட்டியது? இல்லவேயில்லை அவர்கள் இனம் என்ற அடிப்படையில் உணர்வு ரீதியாக செயற்பட்டுள்ளனர். இதுவே அவர்களின் இன்றைய வெற்றியாகும்.
மாகாண சபைத் தேர்தலில் தற்போது கற்றுக் கொண்ட பாடங்கள் எதிர்காலத்தில் பாராளுமன்றத் தேர்தல்களில் முஸ்லிம் பிரதிநித்துவங்களை கனவிலும் கண்டு கொள்ள முடியாதளவிற்கு முஸ்லிம்கள் தற்போது பின் தள்ளப்பட்டுள்ளதை சரியான முறையில் காட்டிச் சென்றுள்ளது.
எனவே தற்போது பிரிந்து நிற்கும் முஸ்லிம் கட்சிகளும் அரசியல் பிரமுகர்களும் தமது வீராப்புக்களையும். போட்டிகளையும் விட்டெறிந்து விட்டு முஸ்லிம் சமுகம் என்ற வகையில் தமிழ் மக்கள் ஒற்றுமைப்பட்டதுபோல் முஸ்லிம் சமுகத்தை ஒற்றுமைப்படுத்தி தமது சமுக உறுதிப்பாட்டை செய்யவேண்டும் என்பது தான் தற்போதைய பின்னடைவு மூலம் எடுத்துக்காட்டப்படுகின்றது.
ஏமாற்றுக்களும், சண்டித் தனங்களும், அட்டகாசங்களும் எக்காலத்திற்கும் பொருந்தாது என்பதனையும் பிரிந்து நிற்கும் தலைமைகள் கண்டு கொள்ளவேண்டும் என முஸ்லிம் மக்கள் கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.
வடமாகாண சபையில் முஸ்லிம்களின் வாக்குகள் பலவாறு பிரிந்ததன் காரமாக கிடைக்கவேண்டி பல ஆசனங்கள் கைநலுவிப் போனதற்கு தற்போது பல கட்சிகளை உருவாக்கியுள்ள அரசியல்வாதிகளே பொறுப்புக் கூறவேண்டுமே தவிர வீணான பொய்க் காரனங்களை கூறி மக்களை ஏமாற்றும் கைங்கரியங்களை இனியும் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதனை சரியாக முஸ்லிம் அரசியல் வாதிகள் புரிந்து கொள்ளவேண்டும்.
முஸ்லிம்களுக்கென மர்ஹூம் அஷ்ரப் ஒரு ஸ்திரமான கட்சியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை உருவாக்கி முஸ்லிம் சமுகம் ஒரு குடையின் கீழ் அனைத்து சமுகங்களையும் அரசியல் பயணத்தில் கொண்டு சென்றார் அது இறுதிவரை இருக்கவேண்டும் என்பதும் கூட அவரது கணவாக இருந்ததது.
மர்ஹூம் அஷ்ரப் அவரது காலத்தில் கட்சி பிரிபடவோ அல்லது யாரும் விலகிச் செல்லவோ அவர் இடம்கொடுக்கவும் இல்லை யாரையும் பகைத்துக் கொள்ளவும் இல்லை. ஆனால் இன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சின்னா பின்னப்பட்டிருப்பதானது முஸ்லிம்கள் மத்தியில் பாரியதொரு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கட்சி எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதன் வடிவம் தற்போது மாறியுள்ளது எதிர்காலத்தில் முஸ்லிம்களின் தனித்துவம், உறுதிப்பாடு என்பனவற்றை செயழிழக்கும் ஒரு விடயமாகவே அமைந்துவிட்டது.
வடமாகாணத்தை தவிர எனைய மாவட்டங்களிலும் முஸ்லிம் கட்சிகள் பின்னடைவையே அடைந்துள்ளது. இதற்கு பிரதான காரணம் முஸ்லிம் சமுகம் முற்றிலும் பல கூறுகளாக பிந்துள்ளமையேயாகும். முஸ்லிம் சமுகம் தமக்குள் ஒற்றுமைப்படாதவரை தொடராக தோல்விகளையே சந்திக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு செல்லவேண்டியேற்படும்.
நமது முஸ்லிம் அரசியல் வாதிகளை, தமிழ் அரசியல்வாதிகளுடன் ஒப்பிடும்போது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்தான், தமிழ் மக்களும் சரி, அவர்கள் சார்ந்த அரசியல்வாதிகளும் சரி, "எதை இழந்தாலும் துணிவையும், தன்னம்பிக்கையேயும் இழக்காது” தன்னைவிட தன் சமூக நலனில் அக்கறையுடன் அரசியல் செய்பவர்கள். தார் வீதிகள், பாதை மின்விளக்குகள்,புதிய கட்டடம் போன்ற போலி அபிவிருத்திக்கும், இலவசங்களுக்கும் துணை போகாது, துணிவுடனும்,அர்பணிப்புடனும் கருமமாற்றி வெற்றிபெற்றவர்கள். ஆனால் நம்மவர்கள் சமூகம் எக்கேடுகெட்டாலும் பரவயில்லை தானும் தன்னை சுற்றியுள்ளவர்களும் நல்லா இருந்தால் போதும் என்ற மனநிலை அரசியல்வாதிகள், இந்நிலைமை மாறாத வரைக்கும் முஸ்லிம் சமூகத்தின் நிலை.........??????????.அல்லாஹ் போதுமானவன்.
ReplyDelete