Header Ads



கிழக்கு மாகாண உள்ளுராட்சி, கிராமிய அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சின் ஆலோசனைக் குழுக்கூட்டம்


கிழக்கு மாகாண உள்ளுராட்சி, கிராமிய அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சின் ஆலோசனைக் குழுக்கூட்டம் 22.10.2013 அன்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் கௌரவ முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது. அமைச்சின் செயலாளர் ரு.டு.யு.அஸீஸ் அவர்களின் நெறியாள்கையுடன் இடம்பெற்ற இக் கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினர்களான கௌரவ.எஸ்.தண்டாயுதபாணி (எதிர் கட்சித் தலைவர்), கௌரவ.கிருஷ்ணபிள்ளை, கௌரவ.கலையரசன், கௌரவ.இராஜேஸ்வரன், கௌரவ.அன்வர் ஆகியோர் இவ்வமைச்சின் கீழ் வரும் திணைக்களங்களைக் கண்கானிப்பதற்கான உறுப்பினர்கள் என்ற வகையில் கலந்து கொண்டனர். 

அமைச்சின் கீழ் இயங்கும் உள்ளுராட்சி திணைக்களம், கிராம அபிவிருத்தி திணைக்களம், பாலர் பாடசாலைக் கல்விப் பணியகம் ஆகிய திணைக்களங்களின் தலைவர்களும் ஏனைய அதிகாரிகளும் இக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

இவ்வமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத் திட்டங்களின் தற்போதய முன்னேற்றம், அவற்றிற்கான நிதி ஒதுக்கீடுகள், இதன் போது எதிர் நோக்கப்படும் பிரச்சனைகள் தொடர்பாகவும் இதன் போது ஆராயப்பட்டது.
கௌரவ மாகாண சபை உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட வினாக்களக்கு கௌரவ முதலமைச்சர் அவர்களிhலும், சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளினாலும் பதில்கள் வழங்கப்பட்டதோடு எதிர் நோக்கப்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழி வகைகளும் ஆராயப்பட்டு அவற்றிற்கு பொருத்தமான தீர்வுகளும் முதலமைச்சர் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது.

(செய்தி – முதலமைச்சருக்கான ஊடகப்பிரிவு)


No comments

Powered by Blogger.