கிழக்கில் அமைச்சுப் பதவி தேவையில்லை என்றவர்கள், வடக்கில் அமைச்சுக்களுக்காக சண்டையிட்டனர்
கிழக்கில் அமைச்சுப் பதவி தேவையில்லை என்றவர்கள் வடக்கில் அமைச்சுக்களுக்காக சண்டையிட்டனர், இவ்வாறு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் புதிய கட்டடத் தொகுதி மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர்; மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பெரும் இன்னல்களைச் சந்தித்த கிழக்கில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் பல அபிவிருத்திப் பணிகள் எனது முதல்வர் பதவிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்டது.
அதன் தொடர் அபிவிருத்திப்பணிகள் இன்றும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன. பாலங்களும் வீதிகளும் எங்களால் அபிவிருத்தி செய்யப்படுகின்றபோது அதற்கு வேறு சிலர் உரிமை கோருகின்றனர். மக்களை திசை திருப்புவதற்காகவும் உண்மைளை மக்களிடமிருந்து மறைப்பதற்காகவும் இத்திட்டமிட்ட செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. மக்களை தங்களது நலன்களுக்காகவும் சொந்த விருப்பு வெறுபுக்காக ஏவிவிடும் செயல்கள் நாகரியமற்றவை.
முழுமையாக அபிவிருத்தியடைந்த மாகாணமாக கிழக்கைக் கூற முடியாது. கிழக்கு மாகாணத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. குறைபாடுகள் நீக்கப்பட்டு கிழக்கு மாகாணம் முழுமையாக அபிவிருத்தியடைய வேண்டுமென்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும்.
யாருக்கு வாக்களிக்க வேண்டும் யாருக்குக்கு வாக்களிக்கக் கூடாது என்பதை மக்கள் மறந்துவிட்டனர். அமைச்சசுப் பதவிகளுக்காக வாக்களிக்க வேண்டாம் என்று கூறி கிழக்கில் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றவர்கள் வடக்கில் அமைச்சுப்பதவிகளுக்காக சண்டையிட்டனர். இதுதான் அவர்களின் அரசியல் சாணக்கியம் என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது.
அத்துடன், வடக்கு கிழக்கு இணைவது சாத்தியமற்றது. கிழக்கு கிழக்காகவே இருந்தாக வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டார்
Post a Comment