காத்தான்குடி, மையவாடி காணியில் சிரமதானம் செய்தபோது இடையூறு
(Tm) காத்தான்குடி, ஆரையம்பதி கர்பலா கிராமத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை முறுகல் நிலைமையொன்று ஏற்பட்டதுடன், பொலிஸாரின் தலையீட்டையடுத்து அங்கு சுமூகமான நிலைமையொன்று ஏற்படுத்தப்பட்டது.
மையவாடி காணியில் சிரமதானம் செய்து கொண்டிருந்தபோதே இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மையவாடிக்காணியில் கர்பலா கிராமத்திலுள்ள ஜும்ஆ பள்ளிவாசலின் நிர்வாகிகளும் அக்கிராமத்திலுள்ள பொதுமக்கள் சிலரும் இன்று வெள்ளிக்கிழமை காலை சிரமதானம் மூலம் துப்பரவு செய்து கொண்டிருந்தனர்.
இதன்போது அங்கு வருகை தந்த ஆரையம்பதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர், இது அரச காணியென்றும் இது மையவாடிக் காணியில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்தே அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பில் கேள்வியுற்று குறித்த இடத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் முறுகல் நிலைமையை சுமூகமான நிலைக்கு கொண்டுவந்ததுடன், இந்த காணிப்பிரச்சினை மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக தீர்க்கும் வரைக்கும் காணியில் சிரமதானம் எதனையும் மேற்கொள்ள வேண்டாமென்றும் பணித்துள்ளனர்.
பொலிஸார் கூறியதையடுத்து அங்கு குழுமியிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றதுடன் மையவாடி காணியை துப்பரவு செய்யும் சிரமதான நடவடிக்கையும் நிறுத்தப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
தமிழர்களும் முஸ்லிம்களை அடக்க வந்து விட்டார்கள் போல
ReplyDelete