Header Ads



மொஹமட் முர்ஸிதான் எகிப்தின் சட்டபூர்வ ஜனாதிபதி - துருக்கி திட்டவட்டமாக அறிவிப்பு


(tn) எகிப்து, சிரியா தொடர்பில் தமது நிலைப்பாட்டில் தொடர்ந்து உறுதியாக இருப்பதாக துருக்கி துணை பிரதமர் புலன்ட் அரின்க் குறிப்பிட்டார்.

“மக்களால் தேர்வு செய்யப்பட்ட எகிப்து ஜனாதி பதிக்கு நாம் ஆதரவளிப்போம். அஹ்மத் ஷபீக் அல்லது ஒமர் சுலைமான் ஜனாதிபதியாகி அவரும் பதவி கவிழ்க்கப் பட்டிருந்தால் அவருக்கும் நாங்கள் ஆதரவளிப்போம்.

“முர்சி (பதவி கவிழ்க்கப்பட்ட எகிப்து ஜனாதிபதி) தேர்தல் மூலம்தான் அலுவலகத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமே ஒழிய இராணுவ சதிப்புரட்சி மூலம் அல்ல. நாம் ஜனநாயகத்திற்கே ஆதரவளிக்கிறோம். முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கல்ல” என்று அரின்க் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் குறிப் பிட்டார்.

எகிப்தில் முதல் முறையாக ஜனநாயக முறையில் தேர்வான ஜனாதிபதி முர்சியை இராணுவம் கடந்த ஜூலை 3ம் திகதி பதவி கவிழ்த்தது.

அதேபோன்று சிரிய பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த துருக்கி துணைப் பிரதமர், “பஷர் அல் அஸாத் தனது சொந்த மக்களுக்கு எதிராக இரசாயன தாக்குதல் நடத்தும் போது நாம் சிரிய மக்களின் பக்கமே நிற்போம்” என்றார்.

No comments

Powered by Blogger.