Header Ads



எஸ்.எச்.எம்.ஜெமீல் பாராட்டு விழாவும், அவரது வாழ்வியல் நூல் வெளியீடும்

இலங்கையின் மூத்தகல்விமான்களுள் ஒருவரும், எழுத்தாளர், பன்னூலாசிரியர், நிர்வாகி, ஆய்வாளர், முஸ்லிம் கலாசார அமைச்சின் முன்னாள் இராஜாங்க செயலாளர், கலாநிதி அஸீஸ் மன்றத்தின் தலைவர், இலங்கை முஸ்லிம் கல்விச்சகாய நிதியின் தலைவர் மற்றும் மேடைபேச்சாளருமான அல்ஹாஜ்.எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களுக்கான பாராட்டு விழாவும்  அவரது வாழ்வியல் நூல் வெளியீட்டு நிகழ்வும் எதிர்வரும் நவம்பர் மாதமளவில் கொழும்பின் புறநகர் (தெஹிவளை) பகுதியில் நடத்துவதென பாராட்டுவிழாக்குழுவினர் தீர்மானித்துள்ளனர்.

பாராட்டு விழா தொடர்பாக பங்களிப்பு செய்வதற்கு தனிப்பட்ட ரீதியாகவோ அல்லது அமைப்புகள் ரீதியாகவோ கலந்துகொள்ள விரும்புவோர் கீழ் கண்ட முகவரியுடன் தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக்கொள்வதோடு கடிதமூலமாகவும் அல்லது மின்னஞ்சல் மூலமாகவும் தமது விபரங்களை தெரியப்படுத்தலாம்.  

Dr. Thassim Ahamed 
Secretary 
S.H.M.Jameel  - Felicitation Committee 
No - 9 Saunders  Court ,
Colombo -02

தொடர்புகளுக்கு  : 0779664063 
மின்னஞ்சல்: doctor thassim @gmail.com

No comments

Powered by Blogger.