கேகாலை நீதிமன்றத்தினால் இருவருக்கு மரண தண்டனை விதிப்பு
கொலை வழக்கொன்றில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு கேகாலை மேல் நீதிமன்றம் இன்று 29-10-2013 மரண தண்டனை விதித்துள்ளது.
27 வயதான இளைஞன் ஒருவரின் கொலை தொடர்பில் 3 குற்றச்சாட்டுக்களின்கீழ் 4 பிரதிவாதிகளுக்கு எதிரான இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
2004 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஐந்தாம் திகதி அல்லது அதனை அண்மித்த நாள் ஒன்றில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இந்த வழக்கின் முதலாவது மற்றும் இராண்டாவது பிரதிவாதிகளை விடுதலை செய்யுமாறு கேகாலை மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Post a Comment