கண்டியில் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியின் தீச் சுடர்
(JM.Hafeez)
பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியின் தீச் சுடர் கண்டிக்குக் கொண்டு வரப்பட்டது.
ஸ்கொட்லாந்தில் எதிர்வரும் ஜூலை மாதம் 23 ம் திகதி இடம் பெறவுள்ள பொதுநலவய நாடுகளின் 20 வது விளையாட்டுப் போட்டி தொடர்பான எலிசபெத் மகாராணியின் சுடரைக் கொண்ட தீப் பந்தம் கண்டிக்குக் கொண்டு வரப்பட்டது.
மேற்படி விளையாட்டுப் போட்டி நடைபெறும் தினத்திற்கு 248 தினங்களுக்கு முன்பிருந்தே பொது நலவாய அங்கத்துவ நாடுகள் 70 ற்கும் இது எடுத்துச் செல்லப் படுகிறது.
கண்டிக்குக் கொண்டு வரப்பட்ட மேற்படி சுடரைக் கொண்ட விசேட பேழை கண்டி ஸ்ரீதலதா மாளிகை உற்பட மற்றும் சர்வ மத ஸ்தலங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. இது தொடர்பாக இடம் பெற்ற வைபவங்களில் தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் தேல, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா, மத்திய மாகாண அமைச்சர் எதிரிவீர வீரவர்தன உற்பட இன்னும் பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment